படையப்பா ஹிட் ஆகும்னு நான் எதிர்பார்க்கல.. சக்சஸ் சீக்ரெட் சொல்லும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்!
சென்னை : 1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே எஸ் ரவிக்குமார்.
சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம் என்று தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்தார்.
தான் இயக்கிய படையப்பா திரைப்படம் குறித்து கே ஸ் ரவிக்குமார் கூறியுள்ள சுவாரஸ்ய தகவல்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து ஹிட் தான்
புரியாத புதிர் படத்தில் தொடங்கி புருஷ லட்சணம், நாட்டாமை, பெரிய குடும்பம், முத்து, பரம்பரை, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, போன்ற பல படங்களில் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்துள்ளார் கே எஸ் ரவிக்குமார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களின் வெற்றிக்கு இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் பங்கும் அதிகமாக இருக்கிறது. நடிகர் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த்தை வைத்து இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

காமெடி பிளஸ் வில்லேஜ்
கிராமத்து படங்கள் என்று சொன்னாலே நாட்டாமை பெயர் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தனது படங்களில் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் கே எஸ் ரவிக்குமார் அதிகமாகவே மெனக்கெடுவார்.இயக்குநராக மட்டும் இல்லாமல் தான் இயக்கும் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் வியக்க வைப்பார். நடிப்பிலும் வெளுத்து வாங்குவார் கே எஸ் ரவிக்குமார்.

பேசப்படும் படம்
இவர் இயக்கிய படையப்பா திரைப்படம் வெளிவந்தது கிட்டத்தட்ட 22 ஆண்டுகளைக் கடந்து உள்ளது. இன்றும் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடி கொண்டு இருக்கின்றனர். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, போன்ற பலர் நடித்திருந்த இந்தப் படத்தை எழுதி, இயக்கியவர் கே எஸ் ரவிக்குமார். இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான்.

நானே எதிர் பார்க்கல
இந்த படத்தின் வெற்றி குறித்து கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றது. படையப்பா படத்தில் வெற்றி குறித்து கேஸ் ரவிக்குமார் கூறியிருப்பதாவது," படையப்பா திரைப்படம் இந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, நான் சாதாரணமாகத்தான் படத்தை இயக்கினேன். முத்து, வரலாறு, போன்ற படங்களை இயக்கும் போது நான் எப்படி இருப்பேனோ, அதேபோல் தான் படையப்பா படத்தை இயக்கும் போதும் நான் இருந்தேன். ஆனால் இந்த அளவிற்கு படம் ஹிட்டாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் முத்து படத்தை விட படையப்பா திரைப்படம் பெரிய ஹிட்டானது. அந்த காலத்திலேயே அந்த படத்தின் பட்ஜெட் 4கோடி தான்.

சிம்பிள் படம்
படையப்பா திரைப்படம் 3 கோடி 60 லட்சத்திற்கு உள்ளேயே படம் முடிந்துவிட்டது. மீதி இருக்கும் 40 லட்சத்திற்கு படக்குழுவினருக்கு செயினை பரிசாக அளித்தார் ரஜினிகாந்த். தெலுங்கில் நரசிம்மா திரைப்படம் இதைவிட சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சீன்ஸ் அனைத்தும் இன்ட்ரஸ்ட்டிங்காக இருக்கவேண்டும் என்று ஸ்க்ரீன் பிளேவில் நாங்கள் பேசிக் கொள்வோம். இந்த படத்திற்கு மட்டுமில்லை, எல்லா படத்திருக்கும் சமமாகத்தான் நாங்கள் உழைப்பை போடுகின்றோம். ஆனால் படையப்பா படத்தை இன்றும் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார் கே எஸ் ரவிக்குமார்.
Recommended Video

ஹிட் கூட்டணி
படையப்பா படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. நீலாம்பரி கதாபாத்திரமும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்று மட்டுமல்ல என்றும் படையப்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் படமாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். படையப்பாவின் வெற்றி குறித்து கே எஸ் ரவிக்குமார் கூறிய இந்த தகவல்கள் தற்போது அனைவரிடத்திலும் பகிரப்பட்டு வருகின்றது. படையப்பா படத்திற்கு பிறகு இவர் இயக்கிய பாட்டாளி, தெனாலி, பஞ்சதந்திரம், வில்லன், வரலாறு, தசாவதாரம் போன்ற பல படங்கள் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











