நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலித்ததை சொன்னபோது எனக்கு ஆச்சர்யமே இல்லை... ஆர்.ஜே.பாலாஜி
சென்னை: மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை தொடர்ந்து வீட்ல விசேஷம் என்கிற படத்தை இயக்கியிருந்தார் ஆர்.ஜே.பாலாஜி.
மக்கள் குடும்பத்துடன் பார்ப்பதுபோல் அமைந்த அந்த இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல பெயரை ஈட்டி தந்தவை.
இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி யூடியூபில் அளித்துள்ள ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பற்றி கூறியுள்ளார்

நானும் ரவுடிதான்
இயக்குநர் சுந்தர்.சி-யால் நடிகராக அறிமுகம் செய்யப்பட்ட ஆர்.ஜே.பாலாஜி நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நல்ல பெயரை சம்பாதித்தார். அவருடைய நகைச்சுவைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் பார்த்திபன் மற்றும் நயன்தாரா மட்டும்தான் பெரிய நடிகர்களாக இருந்தார்கள். விஜய் சேதுபதி கூட வளரும் பருவம்தான். ஆனால் எந்த விதமான பந்தாவும் இல்லாமல் அவர்கள் தங்களுடன் பழகியதாகவும் அதற்குக் காரணம் எங்களுடைய செட் நகைச்சுவையாக இருந்தது என்றும் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

விக்னேஷ் நயன் காதல்
வெளி உலகத்திற்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் காதல் தெரிய வருவதற்கு முன்பாகவே படத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வந்தது. அதிலும் நான் விக்னேஷ் சிவனின் நண்பன் என்பதால் என்னிடம் முதலில் வந்து கூறினார். அவர் கூறினார் என்பதற்காக அவர்கள் இருவரின் தனிப்பட்ட விஷயத்தில் நான் மூக்கை நுழைக்க முடியாது.

ஆச்சர்யம் இல்லை
விக்னேஷ் சிவன் இயல்பாகவே ரொமான்டிக்கான நபர். கண்ணான கண்ணே பாடல் வரிகள் ஒன்று போதும். அவர் எழுதும் பாடல் வரிகளே அவருக்குள் இருக்கும் ரொமான்ஸ் எந்த அளவுக்கு பொங்கும் என்பதை காட்டிவிடும். உருகி உருகி காதல் செய்யக் கூடியவர், நகைச்சுவையாக பேச கூடியவர். அதனால் நயன்தாராவும் அவரும் காதலிப்பதாக என்னிடம் சொன்னபோது எனக்கு எந்த விதமான ஆச்சரியமும் ஏற்படவில்லை.

மூக்கை நுழைப்பதில்லை
வழக்கமாக ஒரு யூட்யூபில் பேட்டி கொடுத்தால், தலைய பத்தி பேசுங்க தளபதியை பத்தி பேசுங்க என்று சொல்வார்கள். படத்தில் நடிக்கும் போதும் அப்படித்தான் வசனம் பேசச் சொல்வார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நான் பேட்டி எடுக்கும்போது கூட அப்படிப்பட்ட கேள்விகளை தவிர்த்து விடுவேன். ஏனென்றால் அது பேட்டி கொடுக்க வந்தவர்களை அசிங்கப்படுத்துவது போல் இருக்கும். அப்படிப்பட்ட நான், எப்படி அவர்களுக்குள் இருக்கும் விசயத்தில் மூக்கை நுழைக்க மாட்டேனோ அதே போல் அவர்களைப் பற்றி பிறரிடம் பேசுவதையும் விரும்ப மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











