twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரேவதின்னு கூப்பிட்டாலே எனக்கு பிடிக்காது.. திரும்பி கூட பார்க்க மாட்டேன்.. ரேவதி சொன்ன நேம் சீக்ரெட்

    |

    சென்னை: 1983ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படத்தின் மூலம் நடிகை ரேவதி அறிமுகமானார்.

    80களில் நடிகையாக அறிமுகமான ரேவதி, இன்றும் தனது கேரியரை விட்டுக் கொடுக்காமல் நடித்துக் கொண்டே இருக்கிறார்.

    சினிமாவுக்கு பிறகு மாறிய தன் வாழ்க்கையும், பெயரை பற்றியும் மனம் திறந்து கூறியுள்ளார் நடிகை ரேவதி.

    யாருயா இந்தாளு... தன் கணவன் ஃபகத் பாசிலை பார்த்து நடிகை நஸ்ரியா மிரண்டதுக்கு காரணம் இதுதானாம்யாருயா இந்தாளு... தன் கணவன் ஃபகத் பாசிலை பார்த்து நடிகை நஸ்ரியா மிரண்டதுக்கு காரணம் இதுதானாம்

     அறிமுக நாயகி

    அறிமுக நாயகி

    மண்வாசனை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரேவதி. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பாண்டியனுக்கும் இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கியவர் பாரதிராஜா. தனது முதல் படமே சூப்பர் ஹிட் ஆன நிலையில், கை கொடுக்கும் கை, புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தால், உன்னை நான் சந்தித்தேன், போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்தார். நடிகை ரேவதியின் துறுதுறு பேச்சும், எதார்த்தமான நடிப்பும் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

     மௌன ராகம் ஹிட்

    மௌன ராகம் ஹிட்

    ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, உதய கீதம், பகல் நிலவு, ஆகாயத் தாமரை, என்று இவர் நடித்திருந்த படங்களின் லிஸ்ட் மிகவும் அதிகம் . 1986 ஆம் ஆண்டு மௌன ராகம் படத்தில் இது நடித்திருந்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. மணிரத்தினம் எழுதி இயக்கிய மௌனராகம் திரைப்படத்தில் மோகன், கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

     முன்னணி நடிகர்களுடன் ஜோடி

    முன்னணி நடிகர்களுடன் ஜோடி

    கமலஹாசன், ரஜினிகாந்த், பிரபு, மோகன், விஜயகாந்த் என்று அப்போது முன்னணி நடிகர்களாக இருந்துவந்த பல நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிகை ரேவதி. தேவர் மகன், மகளிர் மட்டும், அவதாரம், தலைமுறை போன்ற பல படங்கள் இவரது பெயர் சொல்லும் அளவிற்கு அமைந்தது. 1999 ஆம் ஆண்டு நடிகர் மனோஜ், ரியா சென் நடித்திருந்த தாஜ்மஹால் படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்தார்.

    ரெட், தமிழன், கண்ட நாள் முதல், ஒஸ்தி, பவர் பாண்டி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

     லேட்டஸ்ட் ஹீரோஸ்

    லேட்டஸ்ட் ஹீரோஸ்

    அஜித், விஜய், தனுஷ், சிம்பு, என்று எப்போது இருக்கும் முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார். அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை ரேவதி. நடிகை ரேவதி சினிமாவில் நடிக்க துவங்கிய பிறகு தனக்கு ஏற்பட்ட மாற்றங்களை பற்றி மனம் விட்டு கூறியுள்ளார். நடிகை ரேவதியின் உண்மையான பெயர் ஆஷா. ஆஷா எப்படி ரேவதியாக மாறினார். இந்த பெயர் பற்றிய ரகசியத்தையும் கூறியுள்ளார் ரேவதி.

     சுத்தமா பிடிக்கல

    சுத்தமா பிடிக்கல

    தனக்கு ரேவதி என்ற பெயர் வைத்தது சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், எனக்கு எங்க அம்மா அப்பா வைத்த பெயர் ஆஷா. அதை ஏன் மாத்துறீங்க என்று கேட்டுள்ளார். பெயர் மாற்றிய சில மாதங்களுக்கு ரேவதி என்று கூப்பிட்டால், நான் திரும்பி கூட பார்க்க மாட்டேன் என்றும், எனக்கு பெயர் பிடிக்காமல் மிகவும் அழுததாகவும், தனக்கு அந்த பெயர் சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே சினிமா துறையில் ஆஷா என்ற பெயரில் பலர் உள்ளனர். அதனால் தமிழ் திரையுலகில் ஆஷா என்ற பெயர் எடுபடாது. அதனால் பெயர் மாற்றிக் கொள்ளும் படி வற்புறுத்தினார்கள். என் பெயர் மாற்றப்பட்டது குறித்து பேப்பரில் எல்லாம் வந்தது. எனக்கும் ரேவதிக்கும் சம்பந்தம் கிடையாது என்று மிகவும் அடம் பிடித்ததாகவும், சில நாட்களுக்கு பிறகு தனக்கு அந்த பெயர் பிடித்து போனதாகவும், ஃபேமிலி நண்பர்கள் மதியில் ஆஷா என்று தான் இன்றும் அழைப்பார்கள் என்றும், வெளியுலகத்திற்கும் சினிமாவிற்கும் மட்டும் தான் நான் ரேவதி என்றும் கூறியுள்ளார்.

    English summary
    I dont like People Calling me Revathi, Actress Revealing the Name Secret
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X