எங்கப்பா சொன்ன விசயம் உணர்ந்ததாலதான் மஞ்சிமாவ காதலிச்சேன்... கௌதம் கார்த்திக்
சென்னை: நேற்று நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் தங்களது திருமண தேதியை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.
வரும் 28-ஆம் தேதி நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் தங்களுடைய திருமண நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்கள் இருவரும்.

முதல் சந்திப்பு
கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் ஜோடியாக இயக்குநர் முத்தைய்யா இயக்கத்தில் தேவராட்டம் என்கிற படத்தில் நடித்திருந்தார்கள். அந்தப் படத்தில் நடித்ததிலிருந்து இருவரைப் பற்றியும் பல கிசுகிசுக்கள் வந்தன. சமீபத்தில்தான் சமூக வலைதளத்தில் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர். நேற்று திருமண தேதியையும் முறையாக அறிவித்து விட்டனர். தேவராட்டம் படத்தின் படப்பிடிப்பின் போதும் அதன் பின்னர் ஓராண்டும் நண்பர்களாக மட்டுமே பழகி பின்னர்தான் காதலிக்க தொடங்கியதாக கூறியிருக்கிறார்கள்.

ஒரே நிகழ்வு
தனிப்பட்ட முறையில் வைக்கும் திருமண நிகழ்வை தவிர்த்து வரவேற்பு நிகழ்ச்சியோ வேறு எந்த நிகழ்ச்சியோ ஏற்பாடு செய்யவில்லையாம். திருமணத்திற்கு பின்பு முடிந்தால் மீண்டும் சந்திக்கிறோம் ஆனால் கண்டிப்பாக திருமணத்தன்று மதியத்திற்குள் புகைப்படங்களை பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்புகிறோம் என்று கூறியுள்ளார்கள்.

பிற திட்டங்கள்
தற்சமயம் 1947 மற்றும் 10 தலை ராவணன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் கௌதம் கார்த்திக் திருமணத்திற்குப் பிறகு நடிக்கலாமா வேண்டாமா என்று இனிமேல் தான் யோசிக்க வேண்டும் என்று மஞ்சிமா மோகன் தனது தரப்பில் கூறியிருக்கிறார் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் மற்றும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய படங்கள்தான் மஞ்சிமா மோகனுக்கு பிடித்த படங்களாம்.

நவரச நாயகன்
நடிகர் கார்த்திக்கும் காதல் திருமணங்கள் செய்தவர்தான். அவரும் தன்னுடன் சோலைக்குயில் என்ற படத்தில் நடித்த ராகினி என்கிற நடிகையை காதல் திருமணம் செய்தார். பின்னர் ராகினியின் தங்கை ரதியையும் காதல் திருமணம் செய்தார். கௌதம் மற்றும் மஞ்சிமாவின் காதலுக்கு இரு வீட்டாரர்களும் சம்மதித்து முறையாக திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். தன்னுடைய தந்தை கார்த்திக் எப்போதுமே சொல்வாராம், தனக்கான பெண் யார் என்று உணரும் போது தான் இளைஞனாக மாறுவோம் என்று. அந்த வகையில் மஞ்சிமா மோகனை பார்த்த பிறகுதான் சிறு வயதிலிருந்த நான் இளைஞனாக மாறியதை உணர்ந்தேன் என கௌதம் கார்த்திக் கூறியுள்ளார். இந்தக் கட்டுரை மூலம் இருவருக்கும் எங்களுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்


Click it and Unblock the Notifications