ஷங்கரை பார்த்து சூடு போட்டுக் கொண்டேன் என நினைத்தேன்.. இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சுவாரஸ்யம்
சென்னை : தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் கேஎஸ் ரவிக்குமார்
இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இப்பொழுது படங்களில் பல பரிமாண கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலில் நேர்காணலில் பேசிய கேஎஸ் ரவிக்குமார் ஷங்கரை பார்த்து சூடு போட்டுக் கொண்டேன் என தசாவதாரம் படத்தில் நடந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து ண்டுள்ளார்.

பல முன்னணி நடிகர்களுடன்
இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் வெள்ளி விழாக் கொண்டாடி சரித்திரம் படைத்துள்ளது. குறிப்பாக கமல் மற்றும் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது

கூகுள் கூட்டப்பா
கமர்ஷியல் படங்களை மட்டும் அல்லாமல் வித்தியாசமான டெக்னாலஜியை பயன்படுத்தி தசாவதாரம், பஞ்சதந்திரம் உள்ளிட்ட கதைகளையும் இயக்கி அதிலும் வெற்றி கண்டுள்ளார். நட்புக்காக நாட்டாமை படையப்பா முத்து பஞ்சதந்திரம் அவ்வை சண்முகி தெனாலி தசவதாரம் லிங்கா என எண்ணற்ற பிளாக்பஸ்டர் வெற்றி படங்களை இயக்கிய கேஎஸ் ரவிக்குமார் இப்பொழுது நடிகராகவும் தமிழ் சினிமாவில் கலக்கிய கொண்டுள்ளார். குணசித்திர வேடங்களில் நடித்து வரும் அதே சமயம் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்தும் வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் வெளியான கூகுள் கூட்டப்பா என்ற படத்தை தயாரித்து அதில் நடித்து இருந்தார்.

தசாவதாரம்
இவ்வாறு சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளை மேற்கொள்ளும் அசாத்திய திரைப்படங்கள் வெளியாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் மிக பிரமாண்டமானதாக வெளியான திரைப்படம் தசாவதாரம். கமல் ஹாசன் 10 விதமான கதாபாத்திரங்களில் கலக்கிய தசாவதாரம் பாக்ஸ் ஆபீஸில் சலைக்காமல் சக்கை போடு போட்டு மாபெரும் வெற்றி பெற்றது. தசாவதாரம் படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். தமிழ் சினிமாவில் இதுவரை வெளியாகாத மிகவும் புதுமையான கதை களத்தில் வெளியான தசாவதாரம் படத்தில் பணியாற்றிய சுவாரஸ்ய அனுபவம் குறித்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்

ஷங்கரை பார்த்து சூடு போட்டு
தசாவதாரம் படத்தை இயக்குவதற்காக கமல்ஹாசன் கே எஸ் ரவிக்குமாரை அணுகியுள்ளார். கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தை என்னால பண்ண முடியுமா என தெரியவில்லை என சந்தேகமாகவே இருந்தாராம் ஆனால் நடிகர் கமல்ஹாசன்தான் உங்களால் கண்டிப்பாக பண்ண முடியும், உங்களால மட்டும்தான் இந்த படத்தை பண்ண முடியும் என ஊக்கப்படுத்தினார். சிறிய பட்ஜெட்டில் எடுக்க ஆரம்பித்து பின் பிரம்மாண்ட பட்ஜெட் பிரம்மாண்ட படைப்பாக தசவதாரம் உருவானதாம். 15 கதாபாத்திரங்களை தயார் செய்து அதிலிருந்து 10 கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து எடுத்தார்களாம். அதுவரை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுக்கவில்லையே ஒருவேளை ஷங்கரை பார்த்து சூடு போட்டுக் கொள்வோமோ என்ற சந்தேகத்துடனேயே தசாவதாரம் படத்தை இயக்கினேன் என கேஎஸ் ரவிக்குமார் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











