விருப்பமே இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காக சில படங்களில் நடித்துள்ளேன்.. நடிகர் சசிகுமார்!

சென்னை: இயக்குநர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற இருக்கிறார் நடிகர் சசிகுமார்

இயக்கத்தில் இருந்து முற்றிலும் விலகி இப்பொழுது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சசிகுமார் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் தனியா யூட்யூப் சேனல் நேர்காணலில் பேசிய சசிகுமார் விருப்பமில்லாமல் சூழ்நிலைக்காக சில படங்களில் நடித்துள்ளேன் என கூறியுள்ளார்.

 மதுரையின் கதைக்களத்தில்

மதுரையின் கதைக்களத்தில்

தமிழில் மிகச் சிறந்த இயக்குநர்களாக உள்ள பாலா மற்றும் அமீரிடம் இயக்குநராக பணிபுரிந்த சசிகுமார் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஜெய் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் சசிகுமார் நண்பராகவும் அதே சமயத்தில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் மதுரையின் உண்மை தன்மை மாறாமல் இயக்கியிருந்த சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படம் இன்று வரை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

 முழுநேர ஹீரோவாக

முழுநேர ஹீரோவாக

சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் படத்தில் ஹீரோவாக நடித்து ஹீரோவாகவும் அறிமுகமானார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நாடோடிகள் கொடுத்த வெற்றியை தொடர்ந்து முழுநேர ஹீரோவாக மாறினார் சசிகுமார். மீண்டும் ஈசன் என்ற படத்தை இயக்கினார் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.

வில்லேஜ் கதாபாத்திரங்களை

வில்லேஜ் கதாபாத்திரங்களை

இந்நிலையில்தான் இயக்கத்திற்கு முழுக்குப் போட்டுவிட்டு திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வரும் சசிகுமார் தொடர்ந்து வில்லேஜ் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி சசிகுமார் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வர உடன்பிறப்பே எம்ஜிஆர் மகன் ராஜவம்சம் கொம்பு வச்ச சிங்கம்டா என வரிசையாக இவருக்கு படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன

Recommended Video

Ponraj Vellaichamy | சினிமாவில் மதத்தை கலப்பது அரசியல் அயோக்கியத்தனம் | Filmibeat Tamil
விருப்பமே இல்லாமல்

விருப்பமே இல்லாமல்

இப்பொழுது பகைவனுக்கு அருள்வாய், காரி மற்றும் நானா உள்ளிட்ட படங்களில் சசிகுமார் ஹீரோவாக நடித்து வருகிறார். எப்போதும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் சசிகுமாருக்கு சில படங்கள் தோல்வியை பெற்றுத் தந்துள்ளது அதற்கு காரணம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் அவர் பகிர்ந்துள்ளார். என்னதான் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சில கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும் விருப்பமே இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சில படங்களில் நடித்ததாக அந்த நேர்காணலில் சசிகுமார் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X