Don't Miss!
- News
ஞானவாபி மசூதி - சிவலிங்க வழக்கு.. இன்று விசாரணை செய்யும் உச்ச நீதிமன்றம்.. பின்னணி என்ன?
- Finance
இன்றைய தங்கம் விலை எப்படியிருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வரவிற்கு மேல் அதிகமாக செலவு செய்ய நேரிடும்..
- Sports
மோடி மைதானத்திற்கு கிடைத்தது மோட்சம்.. ஒரு வழியாக ஆசை நிறைவேற போகுது.. பிசிசிஐ தந்த அப்பேட்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சவால்... இந்தியாவில் பலரும் காத்து கிடந்த கார் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவகார்த்திகேயனை பார்த்தால் பொறாமையாக உள்ளது.. நடிகர் தனுஷ்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவில் கடின உழைப்பின் மூலம் உச்ச நட்சத்திரமாக உள்ளவர்
சிவகார்த்திகேயன் காமெடிக்கு இணையாக இப்பொழுது ஆக்ஷனிலும் கலக்கி வருகிறார்
இந்த நிலையில் பட விழா ஒன்றில் பேசிய தனுஷ் சிவகார்த்திகேயனை பார்த்தால் பொறாமையாக உள்ளது என மிக உருக்கமாக பேசியுள்ளார்
நம்பவே முடியல என்னால...ஆச்சரியத்துடன் நன்றி சொன்ன தனுஷ்

லூட்டிக்கு அளவில்லாதது
தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சியை கலகலப்பான பேச்சின் மூலம் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக வலம் வந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது வெள்ளித்திரையிலும் கலக்கி கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்களில் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது அதே போல காமெடியனுடன் சிவகார்த்திகேயன் அடிக்கும் லூட்டியும் அளவில்லாதது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது மெரினா படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமான சிவகார்த்திகேயன் அதைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்து 3 படத்தில் நடித்தார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
சிவகார்த்திகேயனின் திறமையை பார்த்த தனுஷ் அவரை ஹீரோவாக எதிர்நீச்சல் படத்தில் நடிக்க வைத்து அந்த படத்தை தயாரித்தும் இருந்தார் எதிர்நீச்சல் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் முழுக்க முழுக்க கிராமத்து கதையில் வெளியான இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் சூரி சிவகார்த்திகேயன் காமெடி மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது மேலும் சத்யராஜ் ஸ்ரீதிவ்யா என பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

சிவகார்த்திகேயனை பார்த்தால் பொறாமையாக
வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட்டி தொட்டி எங்கும் பிரம்மாண்ட வெற்றி பெற்று வசூலிலும் கலக்கியது. இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட விழாவில் பேசிய தனுஷ் சிவகார்த்திகேயனை பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது. ஏனென்றால் நான் சத்யராஜை என்னுடைய படங்களில் நடிக்க வைக்க பல முறை கூப்பிட்டேன் ஆனால் அவர் வரவே இல்லை ஆனால் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். அதைப் பார்க்கவே கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.

என்னுடைய தம்பி மாதிரி
என்னுடைய வீட்டில் நான்தான் கடைசி பையன் அதனாலேயே அனைவரும் என்னை வேலை வாங்குவாங்க. எல்லாரும் சிவகார்த்திகேயன் எனக்கு பிரண்டுக்கும் மேல என்று சொல்வார்கள்l ஆமாம் சிவகார்த்திகேயன் பிரண்டுக்கும் மேல என்னுடைய தம்பி மாதிரி என உணர்ச்சிபூர்வமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட விழாவில் தனுஷ் பேசியுள்ளார்.அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் இன்று வரை மிகவும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.