Don't Miss!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் ஆண்களுக்கு பாலியல் ஹார்மோன்கள் குறைவாக இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
- Sports
கேப்டனாக தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் வெற்றி.. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்.. முழு விவரம்
- News
"லீக்" ஆன பிளான்.. பாஜக வேட்பாளரை.. ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமி சந்திப்பாரா.. ஒரே கல்லில் 2 மாங்காய்
- Automobiles
ராயல் என்பீல்டிற்கு மவுசு குறைகிறதா? இதை பார்த்தா அப்படி தான் தெரியுது...
- Finance
தங்க கடன் மட்டும் 1 லட்சம் கோடி.. திடீரென தங்க நகையை அடகு வைக்கும் மக்கள்.. ஏன்..?!
- Technology
OnePlus Nord 2T வாங்கலாமா? இல்ல Nothing Phone 1 போனுக்கு வெயிட் பண்ணலாமா? எது பெஸ்ட்?
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
படத்துல தான் என்ன லவ் பண்ண ஆள் இருக்கு நேர்ல.. தன் திருமணத்தைப் பற்றி ரகசியம் சொன்ன கார்த்தி!
சென்னை : தமிழில் முன்னணி ஹீரோவாக இருக்கும் கார்த்தி தன் திருமணத்தை பற்றிய ரகசியத்தை கூறியுள்ளார்.
பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சூர்யாவின் தம்பி கார்த்தி. தனது முதல் படத்திலேயே பல ரசிகர்களை தன் கைக்குள் கொண்டு வந்தார்.
ரசிகர்களை விட ரசிகைகளே இவருக்கு அதிகம் என்று கூட சொல்லலாம். பருத்திவீரன் முதல் தற்போது தங்களது கனவு நாயகனாக பல பெண்களும் இவரை கொண்டாடி வருகின்றனர்.
சூர்யா
அதிகாரி..
நான்
குற்றவாளி..
ஆதங்கத்தை
வெளிப்படுத்திய
நடிகர்
கார்த்தி!

நாயகன் கார்த்தி
பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் கார்த்தி. இவரது முதல் படமே சூப்பர் ஹிட்டானதும் இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல என்ற பல படங்களை அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தாலும் மெட்ராஸ் படத்தின் மூலம் இழந்த பெயரை மீட்டெடுத்தார் நடிகர் கார்த்தி.

கைவசம் பல படங்கள்
தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் வெளிவர தயாராக உள்ளது. மேலும் சர்தார் திரைப்படம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. தமிழில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் கார்த்திக்கு ரசிகர்களை விட ரசிகைகள் அதிகம் என்று கூட சொல்லலாம். கனவு நாயகனாக கார்த்தியை கொண்டாடி வரும் பல ரசிகைகள் தமிழ்நாட்டில் உள்ளனர். அப்படிப்பட்ட இவர் தனக்கு காதல் எல்லாம் வரவில்லை என்று கூறியிருக்கிறார்.

வீட்டில் பார்த்த பெண்
நடிகர் கார்த்திக்கு 2011ஆம் ஆண்டு ரஞ்சனி சின்னசாமி என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் நடப்பதற்கு முன் தன அம்மா தனக்கு போட்ட கண்டிஷனை பற்றியும், அதற்கு அவர் கூறிய பதில்களும் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.
திருமணத்திற்கு முன் நடிகர் கார்த்தியின் அம்மா " காதல் திருமணத்திற்கு நான் ஒத்துக்க மாட்டேன் அரேஞ்ச்ட் மேரேஜ் தான் செய்து வைப்போம் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார், பிறகு ஆறு வருடங்களாக பெண் பார்த்துள்ளனர். ஆறு வருடங்கள் கழித்து எந்த பெண்ணும் சரியாக அமையவில்லை என்பதனால், யாரையாவது லவ் பண்ணா சொல்லு திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொன்னாராம் கார்த்தியின் அம்மா.

நம்மள யாரும் லவ் பண்ணல
தன் அம்மா சொன்னதாய் கேட்ட கார்த்தி, இத நீங்க முன்னாடியே சொல்லி இருந்தா பரவா இல்லை, இப்ப நீங்க ரொம்ப லேட் பண்ணிட்டீங்க, இனி நீங்க தான் திருமணம் செய்து வைக்க வேண்டும், நான் யாரையும் காதலிக்கவில்லை, என்னையும் யாரும் காதலிக்கவில்லை என்று அம்மாவிடம் சொல்லியுள்ளார் நடிகர் கார்த்தி. அதன்பிறகு தான் ரஞ்சனி சின்னசாமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். காதல் எல்லாம் படத்தில் தான் செட் ஆகும் நிஜ வாழ்க்கையில், அது எனக்கு அமையவில்லை என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார் நடிகர் கார்த்தி. தன் திருமணத்திற்கு முன் நடந்த சுவாரஸ்யமான தகவலை நடிகர் கார்த்தி கூறியிருப்பது தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்டுகள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். முன்னணி நடிகராக இருக்கக்கூடிய கார்த்திக்கு இந்த நிலைமை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று ஒரு ரசிகர் வேடிக்கையாக கூறியுள்ளார்.