என் கணவரை பிரியும் போது நான் போட்ட ஒரே கண்டிஷன் இதுதான்.. மனம் திறந்த பிரகாஷ்ராஜ் மாஜி மனைவி!

சென்னை : நடிகரான தனது கணவர் பிரகாஷ்ராஜை விட்டு பிரியும் பொழுது தான் போட்ட கண்டிஷனை பற்றி மனம் திறந்துள்ளார் அவரது மாஜி மனைவி லலிதா குமாரி.

வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் பின்னி பெடல் எடுக்க கூடியவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ். இவரது நடிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். கன்னட படமே இவருக்கு அறிமுகப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அறிமுக நாயகன்

அறிமுக நாயகன்

80'ஸ் காலகட்டத்தில் இருந்து சினிமாவில் நடிக்கத் துவங்கி தற்போது தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று வைத்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். குணச்சித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்று கூட சொல்லலாம். பல வில்லன் நடிகர்கள் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் சட்டென நினைவுக்கு வருவது பிரகாஷ்ராஜின் முகம் தான். வில்லன் என்று சொன்னாலே இவரது பெயர் நினைவுக்கு வரும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். பிரபுவுடன் இணைந்து டூயட் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. புள்ள குட்டிக்காரன், ஆசை, விஐபி, இருவர் போன்ற பல படங்கள் இவரது நடிப்பில் ஹிட் கொடுத்தது. பத்ரி, அள்ளித்தந்த வானம் போன்ற பல படங்கள் மூலம் அடுத்தடுத்து வாய்ப்புகளும் கிடைத்தது. அப்பு படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

பல விருதுகள்

பல விருதுகள்

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு சிறந்த சப்போர்ட்டிங் நடிகருக்கான விருது கிடைத்தது. பல முறை சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதையும் சிறந்த வில்லனுக்கான விருதையும் பெற்றுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

அறிந்தும் அறியாமலும், அந்நியன், வேட்டையாடு விளையாடு, போக்கிரி, சந்தோஷ் சுப்ரமணியம், அபியும் நானும், சிங்கம், கில்லி போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்புக்கு தீனி போட்ட படங்களாக அமைந்தது .

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

1994 ஆம் ஆண்டு லலிதாகுமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பிரகாஷ்ராஜ். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2009ஆம் ஆண்டு இருவரும் சுமூகமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இவர்களுக்கு பூஜா, மேக்னா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. பிரகாஷ்ராஜின் மாஜி மனைவி லலிதா குமாரி தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் பற்றியும், இருவரும் பிரிய முடிவெடுத்த பிறகு தான் போட்ட கண்டிஷன் பற்றியும் மனம் திறந்து கூறியுள்ளார்.

பிள்ளைகள் முக்கியம்

பிள்ளைகள் முக்கியம்

இருவரும் பிரிந்தது குறித்து லலிதா குமாரி கூறுகையில்," கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இணைந்து கணவன் மனைவியாக வாழ்ந்த எங்களுக்குள் சின்ன மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால் இருவரும் பேசி சுமூகமாக பிரிய முடிவெடுத்தோம். எங்களின் இந்த முடிவு மூலம் குழந்தைகள் பாதிப்படைய கூடாது என்பதற்காக யோசித்து முடிவு எடுத்தோம். மேலும் குழந்தைகள் விஷயத்தில் எது நடந்தாலும் இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று பேசிக்கொண்டோம். நாம் இருவர் மட்டுமே பிரிந்து வாழ்கிறோம். ஆனால் நமது குழந்தைகளுக்கு அப்பா அம்மா நாம்தான் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். நாங்கள் பிரியும் பொழுது நான் போட்ட முதல் கண்டிஷன் இதுதான்" என்றும் மனதில் மனம் திறந்து கூறியுள்ளார் பிரகாஷ்ராஜின் மாஜி மனைவி லலிதா குமாரி. அதுமட்டும் இல்லாமல் இப்போது வரைக்கும் குழந்தைகளை அவர் நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறார் என்றும் லலிதாகுமாரி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X