அட்டகத்தி படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது.. வாய்ப்பை தவறவிட்ட வருத்தத்தில் ஜெய்!
சென்னை: 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ், நந்திதா ஸ்வேதா ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படம் அட்டகத்தி. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.
எவனோ ஒருவன், ஆடுகளம், மௌனகுரு போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களை நடித்து வந்த தினேஷ் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் நடிகர் ஜெய்.

மல்டி ஸ்டார் படங்கள்
2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளியான பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் ஜெய். பகவதி படத்திற்கு பிறகு சென்னை 600028, சுப்ரமணியபுரம், சரோஜா, வாமனன் போன்ற பல படங்களில் நடித்து வந்தார் நடிகர் ஜெய்.
இவர் நடித்த எங்கேயும் எப்போதும் திரைப்படம் இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யுடன் அனன்யா, அஞ்சலி, போன்ற பலரும் நடித்திருந்தனர். ராஜா ராணி, பிரியாணி என்று தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், இவருக்கென்று ஒரு தகுதியான ஹிட் படங்கள் அமையவில்லை என்பது ரசிகர்களின் வருத்தம்.

ஆவரேஜ் லெவல்
சமீபத்தில் நடிகர் ஜெய் மற்றும் சுந்தர்.சி நடித்து வெளியான பட்டாம்பூச்சி திரைப்படமும் ஆவரேஜ் லெவல் படமாகவே அமைந்தது. தற்போது இவர் நடிப்பில் எண்ணித்துணிக திரைப்படம் திரையரங்கங்களில் வெளியாகி உள்ளது. இவருடன் இணைந்து அதுல்யா ரவி, அஞ்சலி நாயர், வித்யா பிரதீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் ஜெய், எப்படியாவது பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என்று கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.

வரவேற்பை பெற்ற அட்டகத்தி
இந்நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அட்டகத்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் அப்போது பல படங்களில் கமிட்டாகி இருந்ததனால் அந்த வாய்ப்பு தவறவிட்டதாகவும் கூறியுள்ளார், நல்ல வரவேற்பு பெற்ற அட்டகத்தி திரைப்படத்தில் தினேஷ், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பா. ரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் சந்தோஷம் நாராயணன், இவருக்கு இதுவே முதல் படம். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆன நிலையில், ஆடி போனா ஆவணி பாடல் மிகவும் பிரபலமானதும் குறிப்பிடத்தக்கது. .

தவறவிட்ட வாய்ப்பு
கோவா படத்தில் ஜெய் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பா. ரஞ்சித் அவர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த சமயத்தில் இந்த அட்டகத்தி பட கதையை கோவா சூட்டிங் ஸ்பாட்டில் ஜெய்யிடம் கூறியிருக்கிறார் பா.ரஞ்சித் . அந்த சமயத்தில் நடிகர் ஜெய் எங்கேயும் எப்போதும் போன்ற பல படங்களில் கமிட்டாகி இருந்ததனால் அந்த வாய்பபை தவறவிட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு தினேஷை தேர்வு செய்த பா. ரஞ்சித் அந்த படத்தை முடித்துள்ளார். அந்த படம் முடிந்த பிறகு படத்தை நான் முழுமையாக பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது .அந்த படத்தின் இசை என்னை மிகவும் கவர்ந்தது. சந்தோஷ் நாராயணன் முதல் படத்திலேயே தன்னை நிரூபித்து உள்ளார் என்று த்ரோ பேக் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார் நடிகர் ஜெய்.


Click it and Unblock the Notifications











