twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பசங்க படத்துக்காக 27 தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னேன்.. இயக்குனர் பாண்டிராஜ் சொன்ன பகீர் தகவல்!

    |

    சென்னை: குழந்தைகளை மையமாக வைத்து வெளியான பசங்க படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ்

    Recommended Video

    Pasanga Sivakumar | காதல் படத்துல நடிக்க இருந்தது Sandhya இல்ல | ThavamaiThavamirundhu| *Interview

    இப்பொழுது தமிழ் சினிமாவில் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ஆழமாக பதிவு செய்து வருகிறார்

    இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பசங்க படத்துக்காக 27 தயாரிப்பாளர்களிடம் கதை கூறினேன் என பகீர் தகவலை பாண்டிராஜ் பகிர்ந்துள்ளார்.

    குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம்.. ஸ்நேகா -பிரசன்னாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்! குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம்.. ஸ்நேகா -பிரசன்னாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்!

    முதல் படத்திலேயே குழந்தைகளுக்கு முக்கியத்துவம்

    முதல் படத்திலேயே குழந்தைகளுக்கு முக்கியத்துவம்

    இயக்குநர் சிம்புதேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாண்டிராஜ் பசங்க மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை கையில் எடுத்து அதை மிகச் சரியாக செய்து தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் அப்படம் வென்றுள்ளது. முதல் படமே மிக குறைந்த பட்ஜெட்டில் எடுத்து வெற்றி படமாக கொடுத்த பாண்டிராஜ் இப்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். பொதுவாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே குடும்ப உறவுகளைப் பற்றியும் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் பற்றியும் மிக அழுத்தமாக பேசியிருப்பார். அந்தவகையில் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் மிகப்பெரிய ஆதரவை பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றது

    கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை

    கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை

    அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தையும் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இந்த படமும் குடும்ப உறவுகளின் பாசத்தையும் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் பற்றி மிக அழுத்தமாக பேசியிருந்தது. கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கினார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து வெளியான எதற்கும் துணிந்தவன் வெற்றி பெற்றது.

    27 தயாரிப்பாளர்களிடம் கதையை சொன்னேன்

    27 தயாரிப்பாளர்களிடம் கதையை சொன்னேன்

    இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய பாண்டிராஜ் என்னுடைய முதல் படம் பசங்க. தமிழ் சினிமாவில் குழந்தைகளைப் பற்றி எடுக்கப்படும் படங்களுக்கு மிக குறைவான வரவேற்பு மட்டுமே கிடைக்கும் என்ற சூழலில் பசங்க படத்தை தயாரிப்பதற்கு கிட்டத்தட்ட 27 தயாரிப்பாளர்களிடம் கதையை சொன்னேன். இதில் பெரும்பாலானோர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கக் கூடியவர்கள். இருந்தும் பசங்க படத்தை தயாரிக்க யாரும் முன் வரவில்லை.

    சசிகுமார் தான் பசங்க படத்தை தயாரிக்க முன் வந்தார்

    சசிகுமார் தான் பசங்க படத்தை தயாரிக்க முன் வந்தார்

    இந்த சமயத்தில் தான் சுப்ரமணியபுரம் என்ற படத்தை சசிகுமார் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அவ்வளவு பிரபலமான நடிகரோ இயக்குனரோ இல்லை. எல்லார்கிட்டயும் கேட்டு பார்த்துட்டோம் சசிகுமார் கிட்டயும் ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்கலாம் என சசிகுமாரிடம் சென்று பசங்க கதையை கூறினேன். அவர்தான் பசங்க படத்தை தயாரிக்க முன் வந்தார் என இயக்குனர் பாண்டிராஜ் இந்த பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்

    English summary
    I have told Pasanga Story to 27 Producers, Reveals Director Pandiaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X