கில்லி படத்தை வெறிபிடித்த மாதிரி பார்த்தேன்.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிவாகை சூடியுள்ளது.

விக்ரம் வெற்றியை தொடர்ந்து விக்ரம் 3 லோகேஷ் கனகராஜ் இயக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கில்லி படத்தை வெறி பிடித்த மாதிரி பார்த்த அனுபவம் குறித்து லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

கோலிவுட்டில் கலக்கல் இயக்குநராக

கோலிவுட்டில் கலக்கல் இயக்குநராக

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களை இம்ப்பிரஸ் செய்து வைக்கிறார். ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரையும் இப்பொழுதே கோலிவுட்டில் கலக்கல் இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கும் இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகளை பெற்று வருகிறது

 கமர்ஷியல் மசாலாக்கள் இல்லாமல்

கமர்ஷியல் மசாலாக்கள் இல்லாமல்

அந்த வகையில் மாநகரம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அந்த படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. அதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கைதி படத்தை இயக்கினார் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் வழக்கமான கமர்ஷியல் மசாலாக்கள் இல்லாமல் வெளியான கைதி திரைப்படம் தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வருகிறது

வெளிநாடுகளிலும் மாஸ் காட்டி வசூல்

வெளிநாடுகளிலும் மாஸ் காட்டி வசூல்

தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்த திரைப்படம் மாஸ்டர் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் மாஸ் காட்டிய மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது. விஜய், விஜய் சேதுபதி இருவருக்கும் சரி சமமான திரைக்கதை அமைத்து மிரட்டியிருந்தார் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் இணைந்த திரைப்படம் விக்ரம்.

கில்லி படத்தை 5 முறை பார்த்தேன்

கில்லி படத்தை 5 முறை பார்த்தேன்

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த இந்த படத்தில் கமல்ஹாசன்,சூர்யா,விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று ஆல் சென்டர்களிலும் பிளாக்பஸ்டர் வெற்றியை கண்டுள்ளது. இன்றுவரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ் கில்லி படம் பார்த்த அனுபவத்தை மறக்கவே முடியாது. திரையரங்குகளில் மட்டுமே கிட்டத்தட்ட 5 முறை அந்தப்படத்தை பார்த்துள்ளேன். என்னுடைய ஃபேவரைட் படமாக இருந்து வருகிறது என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X