அந்த படத்தை மட்டும் 300 முறை பார்த்துள்ளேன்... விக்னேஷ் சிவன் ஃபேவரைட் படம் எது தெரியுமா?

சென்னை: இப்போதுள்ள தலைமுறைக்கு ஏற்றவாறு ட்ரெண்டிங்கான காதல் படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்

நானும் ரவுடிதான் கூட்டணி மீண்டும் இணைந்த காத்துவாக்குல ரெண்டு காதல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்றது

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய விக்னேஷ் சிவன் அந்த படத்தை மட்டும் 300 முறைக்கு மேல் பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.

ட்ரெண்டிங்கான காதலை

ட்ரெண்டிங்கான காதலை

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் இப்போ உள்ள தலை முறைக்கு ஏற்றவாறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு வெளியாவதால் இன்றைய தலைமுறையினர் மிகவும் அவரது படத்தை விரும்பிப் பார்த்து வருகின்றனர். குறிப்பாக இப்போதுள்ள ட்ரெண்டிங்கான காதலை இயக்கி வரும் விக்னேஷ் சிவன் போடா போடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்

பெரும் போராட்டத்திற்குப் பிறகு

பெரும் போராட்டத்திற்குப் பிறகு

முதல் படத்திலேயே வித்தியாசமான காதலை மிக எதார்த்தமாக கூறியுள்ள விக்னேஷ் சிவனுக்கு போடா போடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை என்றாலும் ரசிகர் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றார் இந்த நிலையில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி படத்தை இயக்கி ஒட்டுமொத்த திரையுலகினரும் திரும்பிப் பார்க்க வைத்தார். விஜய் சேதுபதி,நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர் ஜே பாலாஜி, ஆனந்தராஜ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்

விஜய் சேதுபதி டம்மி ரவுடியாக

விஜய் சேதுபதி டம்மி ரவுடியாக

நானும் ரவுடிதான் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது இந்த படத்தில் விஜய் சேதுபதி டம்மி ரவுடியாகவும், நயன்தாரா காது கேட்காத பெண்மணியாகவும் நடித்து அசத்தி இருப்பார்கள் நானும் ரெடி தான் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் நல்ல வெற்றியை பெற்றுத் தந்தத

அஜித்தின் 62

அஜித்தின் 62

இந்த நிலையில் நானும் ரவுடி தான் கூட்டணி மீண்டும் இணைந்து திரைப்படம் காத்துவாக்குல இரண்டு காதல் இந்த படம் சென்ற மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. மிகவும் புதுமையான கோணத்தில் ஒரு ஆண் இரண்டு பெண்களை காதலிக்கும் வித்தியாசமான கதையில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்

300 முறை பார்த்துள்ளேன்

300 முறை பார்த்துள்ளேன்

அந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் பேசியுள்ள விக்னேஷ் சிவன் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தை மட்டும் 200, 300 முறை பார்த்துள்ளேன் இதுவரை காட்பாதர் படத்தை கூட பார்த்ததில்லை. என்னை பொறுத்த வரையிலும் அதிகமான படங்களை குறைவான முறை பார்க்க மாட்டேன். குறைவான படங்களை அதிக முறை பார்ப்பது தான் என்னுடைய வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் திரைப்படம் என் வாழ்வில் மிகவும் முக்கியமான படம் எப்பொழுது நினைத்தாலும் அந்தப்படத்தை பார்த்துக்கொண்டே இருப்பேன் என விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X