twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் சாதாரணமாக செய்யும் ஒன்றை, நான் செய்ய தயங்கினேன். டைரக்டர் விடவில்லை... கணம் பட விழாவில் நாசர்!!

    |

    சென்னை: தரமான படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தற்சமயம் உருவாக்கியுள்ள திரைப்படம் கணம்.

    விருதுகள் வென்ற பல குறும்படங்களை இயக்கியிருக்கும் ஸ்ரீ கார்த்திக் என்பவர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

    இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் கமல்ஹாசன் அவர்களை மேற்கோள்காட்டி பேசியிருக்கிறார்.

    தெலுங்கு திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு..அட இதை எப்பவோ செய்துட்டாரே சூர்யா..நாசர் பெருமிதம்தெலுங்கு திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு..அட இதை எப்பவோ செய்துட்டாரே சூர்யா..நாசர் பெருமிதம்

    கணம்

    கணம்

    தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் டைம் ட்ராவலர் ஜானரில் உருவாகும் திரைப்படம்தான் கணம். அமலா, நாசர், எங்கேயும் எப்போதும் சர்வானந்த், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரித்து வருமா, ரமேஷ் திலக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    31 ஆண்டுகள் இடைவெளி

    31 ஆண்டுகள் இடைவெளி

    மைதிலி என்னை காதலி என்கிற தமிழ் படம் மூலம் திரை உலகிற்கு டி.ராஜேந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை அமலா. அதன் பின்னர் மலையாளம், தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து பிசியானவர். கடந்த 1992-ல் தெலுங்கு நடிகர் நாகார்ஜுன் அவர்களை திருமணம் முடித்தார். திருமணத்திற்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்துதான் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்திருந்தார். இப்போது கணம் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அமலா ஒரு தமிழ்ப் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

    நாசரின் நகைச்சுவை

    நாசரின் நகைச்சுவை

    டைம் ட்ராவலர் ஜானர் தன் மனதிற்கு நெருக்கமான ஜானர் என்றும் கணம் கதையை இயக்குநர் கூறியபோது அதில் தனக்கு பல்வேறு சந்தேகங்கள் இருந்ததாகவும், மேம்போக்காக கதையை சொல்லி விடக்கூடாது, ஜுராசிக் பார்க் படத்தில் எப்படி மக்களுக்கு எளிமையாக புரிய வைத்தார்களோ அதுபோல புரிய வைக்க வேண்டும் என்று இயக்குநரை தான் வலியுறுத்தியதாகவும் பல சமயங்களில் தங்களுக்குள் சண்டை வந்துள்ளதாகவும் நாசர் கூறியுள்ளார்.

    கமல் மேற்கோள்

    கமல் மேற்கோள்

    இந்தப் படத்தில் கிழவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாசர். பிராஸ்தெட்டிக் மேக்கப் போட வேண்டும் என்று இயக்குநர் கூறியபோது நாசர் மறுப்பு தெரிவித்தாராம். காரணம் தினமும் இரண்டு மணி நேரம் மேக்கப் போட வேண்டும் அதனால் கிழவன் போல நான் நடிக்கிறேன் என்று நாசர் கூறியும் இயக்குநர் அதற்கு சம்மதிக்க வில்லையாம். பின்னர் மேக்கப்புடன்தான் நடித்துள்ளார் நாசர். முகத்தில் மட்டுமே மேக்கப் போடுவதற்கு இவ்வளவு சிரமமாக இருக்கிறது ஆனால் உடல் முழுவதும் பல படங்களில் பிராஸ்தெட்டிக் மேக்கப் போட்டு நடிக்கக்கூடிய ஒரே தலை சிறந்த நடிகர் கமல்தான் என்று நாசரரந்த நிகழ்வில் பெருமையாக பேசியுள்ளார்.

    English summary
    Kanam is currently produced by Dream Warrior Pictures, a production company that produces quality films. Sri Karthik, who has directed several award-winning short films, makes his directorial debut. In Kanam Movie Function, Kamalhaasan said, I hesitate to makeup for hours of time, unlike Kamalhaasan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X