ஸ்ரீதேவியுடன் மீண்டும் நடிக்கப் போகிறேன், கதை தயாராகிறது - கமல்ஹாசன்

By Sudha

மும்பை: ஸ்ரீதேவியுடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன். அவரும் தயார்தான். நானே கதையும் எழுதி வருகிறேன். அந்தக் கதை அவருக்குப் பொருத்தமாகவும் இருக்கும்.விரைவில் தகவல்கள் முழுமையாகும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார் என்று பாலிவுட்டிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்போது 40 வயதுகளில் இருக்கும் முக்கால்வாசிப் பேருக்கு இன்னும் கனவுக் கன்னி ஸ்ரீதேவிதான். அதுவும் கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்தத அத்தனைப் படங்களையும் எத்தனை தடவை இவர்கள் பார்த்திருப்பார்கள் என்று கணக்கே சொல்ல முடியாது. அப்படி ஒரு தீவிரமான கமல் -ஸ்ரீதேவி காம்பினேஷன் ரசிகர்களாக இவர்கள் இருப்பார்கள்.

இப்போது இவர்களுக்கு ஒரு நற்செய்தி .. அதாவது கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் மீண்டும் இணையப் போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அழகு மயிலும் .. சப்பாணி கமலும்

அழகு மயிலும் .. சப்பாணி கமலும்

கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் சேர்ந்து மிரட்டிய அற்புதப் படம் 16 வயதினிலே. இருவரின் நடிப்பையும் பார்த்துப் பிரமித்துப் போனது தமிழ் சினமா அன்று. கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் இணைந்து தமிழில் ஜோடியாக நடித்த முதல் படம் அதுதான். கமல்ஹாசனுக்குள் ஒளிந்திருந்த நடிகன் அந்தப் படத்தில்தான் முழுமயாக வெளியே வந்தான்.

குடை மிளகாய் மூக்கும் ரெட்ரோஸும்...

குடை மிளகாய் மூக்கும் ரெட்ரோஸும்...

அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடித்த 2வது படம் சிகப்பு ரோஜாக்கள். குடைமிளகாய் மூக்குக்காரி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்ரீதேவி, இப்படத்தில் அருமையாக நடித்திருப்பார். கமல், ஸ்ரீதேவி ஜோடி நிரந்தரமாக செட்டாக இந்தப் படங்கள் எல்லாம் உதவின.

கலகலப்பேற்படுத்திய கல்யாண ராமன்

கலகலப்பேற்படுத்திய கல்யாண ராமன்

அடுத்து இருவரும் இணைந்த படம் கல்யாண ராமன். இப்படத்தில் கமல்ஹாசனின் மாறுபட்ட இரு வேடமும், ஸ்ரீதேவியுன் நடிப்பும், அவர்களுக்குள் நிலவிய அபாரமான கெமிஸ்ட்ரியும் வெகுவாக அப்போது பேசப்பட்டது.

நடிப்பில் வெளுத்துக் கட்டிய வறுமையின் நிறம் சிவப்பு

நடிப்பில் வெளுத்துக் கட்டிய வறுமையின் நிறம் சிவப்பு

ஸ்ரீதேவியும் சரி, கமல்ஹாசனும் சரி நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு வெளுத்துக் கட்டிய படம் என்றால் அது வறுமையின் நிறம் சிவப்புதான். இருவரையும் அட்டகாசமாக வேலை வாங்கியிருப்பார் கே.பாலச்சந்தர். யாருடைய நடிப்பைப் பார்ப்பது, யாரைப் பார்த்து வியப்பது என்று ரசிகர்ள் குழம்பிப் போகும் அளவுக்கு இருவரும் பின்னி எடுத்திருப்பார்கள்.

கமலையே ஓவர்டேக் செய்த மீண்டும் கோகிலா

கமலையே ஓவர்டேக் செய்த மீண்டும் கோகிலா

கமல்ஹாசன் படத்தில் அவ்வளவு சீக்கிரம் யாரும் அவரை ஓவர்டேக் செய்ய முடியாது. ஆனால் மீண்டும் கோகிலா படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பு படு பிரமாதமாக இருக்கும். பல சீன்களில் கமல்ஹாசனையே முந்தியிருப்பார்.

சிவாஜிக்கு வசந்த மாளிகை.. கமல், ஸ்ரீதேவிக்கு வாழ்வே மாயம்

சிவாஜிக்கு வசந்த மாளிகை.. கமல், ஸ்ரீதேவிக்கு வாழ்வே மாயம்

வசந்த மாளிகையின் காப்பிதான்.. இருந்தாலும் தங்களது வித்தியாசமான நடிப்பால் படத்திற்குப் புது முகம் கொடுத்திருப்பார்கள் கமலும், ஸ்ரீதேவியும். அக்கால இளைஞர்களுக்கு இப்படம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

முத்திரை பதித்த மூன்றாம் பிறை

முத்திரை பதித்த மூன்றாம் பிறை

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம். பாலுமகேந்திராவின் கவித்துவமான இயக்கத்தில் வித்தியாசமான ஸ்ரீதேவியை நாடே பார்த்தது. ஸ்ரீதேவி்க்கு அகில இந்திய அளவில் ஒரு முகம் தேடிக் கொடுத்ததும் இப்படம்தான். இதுவே பின்னர் இந்தியில் சத்மா என்ற பெயரில் டப் ஆனது. கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் கடைசி சீன் வரை ஜமாய்த்திருப்பார்கள்.

இதுதான் கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்த கடைசிப் படமும் கூட.

மீண்டும் ஜோடி சேருவார்களா...?

மீண்டும் ஜோடி சேருவார்களா...?

இந்த நிலையில் கமல்ஹாசனும்,ஸ்ரீதேவியும் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மூன்றாம் பிறையின் தொடர்ச்சி என்று ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் அப்படி இல்லை என்று இன்னொரு தரப்பு தகவல் கூறுகிறது. ஆனால் இருவரும் இணையப் போவது உண்மைதான் என்று கமல்ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

கதை தயாராகிறது

கதை தயாராகிறது

இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், உண்மைதான்,ஸ்ரீதேவியுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன். கதையும் தயாராகி வருகிறது, நானே எழுதுகிறேன். அவருக்குப் பொருத்தமானதாக இருக்கும். முழு விவரம் இன்னும் முடிவாகவில்லை என்றார்.

பெரும் ஆர்வத்தில் ஸ்ரீதேவி

பெரும் ஆர்வத்தில் ஸ்ரீதேவி

சமீபத்தில் மும்பைக்கு வந்தபோது இந்தப் புதுப் படம் குறித்து ஸ்ரீதேவியுடன் போனில் பேசினாராம் கமல்ஹாசன். ஸ்ரீதேவியிடம் கதை குறித்தும் பேசியதாக சொல்கிறார்கள். ஸ்ரீதேவிக்கும் கதை பிடித்து விட்டதாம். நடிக்க ஆர்வமாக இருப்பதாக கமலிடம் கூறியுள்ளார் ஸ்ரீதேவி என்றும் சொல்கிறார்கள்.

இது சத்மா அல்லது மூன்றாம் பிறையின் ரீமேக்கா அல்லது தொடர்ச்சியா அல்லது வேறு கதையா... கமலே சொன்னால்தான் உண்டு...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X