Don't Miss!
- News
"மரண அடி".. இதான் கரெக்ட்டான டைம்.. இதுக்கும் தடையா?.. தாலிபன்களின் ஓவர் அட்டகாசம்.. எகிறிய ஐ.நா.
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Lifestyle
இறந்த உடலை சாப்பிட்ட அரசர்கள் முதல் அரசவையில் சுயஇன்பம் செய்த அரசர் வரை தலைசுற்ற வைத்த மன்னர்கள்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
படம் பார்க்கிறது எனக்கு சுத்தமா பிடிக்காது..என் குழந்தைகளைக்கூட பார்த்துக்கல.. நளினி சுவாரஸ்யம்
சென்னை: ஓம் சக்தி, சரணாலயம், மனைவி சொல்லே மந்திரம், தங்கைக்கோர் கீதம் போன்ற பல படங்களில் நடித்தவர் நளினி.
தமிழில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார் நளினி.
தனது குடும்பத்தை பற்றியும், தான் குழந்தை வளர்த்ததை பற்றியும் நடிகை நளினி கூறியிருப்பது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
கமல் இழந்த அத்தனையையும் மீட்டுக் கொடுத்தவர் இவர்: இப்படி பாரதிராஜா பாராட்டியது யாரைன்னு தெரியுமா?

அன்று முதல் இன்று வரை
சிவாஜி முதல் இன்று இருக்கும் முன்னணி நடிகர்கள் வரை அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை நளினி. 1981 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ராணுவ வீரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நளினி. சன் டிவியில் ஒளிபரப்பான கிருஷ்ணதாசி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார் நளினி. கிருஷ்ணதாசி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு சின்ன பாப்பா பெரிய பாப்பா, கோலங்கள், வாணி ராணி, சந்திரலேகா போன்ற பல ஹிட் தொடர்களில் நடித்துள்ளார் நடிகை நளினி.

எதார்த்த நடிகை நளினி
80களில் இருந்து இன்று வரை தனது எதார்த்தமான பேச்சாலும், நடிப்பாலும் பல ரசிகர்களை தக்க வைத்துள்ளார் நடிகை நளினி.
வம்ச விளக்கு, எழுதாத சட்டங்கள், உறவை காத்த கிளி, ராஜரிஷி போன்ற பல படங்களில் தனது நடிப்பால் மிரள வைத்த நளினி, தற்போது சின்னத்திரையிலும் வெளுத்து வாங்கி வருகிறார். தற்போது கலர்ஸ் தமிழில் வள்ளி திருமணம் என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண வாழ்க்கை
நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை நளினி, 13 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றார்.
இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டை குழந்தைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தனது திருமண வாழ்க்கை பற்றியும் குழந்தைகள் வளர்ப்பைப் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகை நளினி. இது குறித்து அவர் கூறுகையில்," நான் குழந்தைகளை வளர்க்கவே இல்லை. குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு நான்கு வேலையாட்களை வைத்துக் கொண்டேன்.

குழந்தையை வளர்க்கவில்லை
தியேட்டருக்கு செல்வது, சினிமா பார்ப்பதெல்லாம் எனக்கு பிடிக்காது. நன்றாக சமைப்பது பரிமாறுவது போன்ற இல்லத்தரசிகள் செய்யும் அனைத்து வேலைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் குழந்தை மட்டும் என்னால் பார்த்துக் கொள்ள முடியாததால், நான்கு வேலையாட்களை வைத்துக்கொண்டு நான் குழந்தைகளை பார்த்துக் கொண்டேன் என்று நடிகை நளினி கூறியுள்ளார். இவர் எதார்த்தமாக பேசும் இயல்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர் பொதுவாகவே நடிகைகள் எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஆனால் நீங்கள் வெளிப்படையாக பல விஷயங்களை கூறுகிறீர்கள் என்று ரசிகர்கள் நடிகை நளினிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.