twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரகுவரனுடன் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்... தனுஷின் த்ரோ பேக் பேட்டி

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு என எப்போதுமே தனி இடம் உண்டு.

    நம்பியார், அசோகன், ரஜினிகாந்த், சத்யராஜ், ரகுவரன், பிரகாஷ்ராஜ் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நடிகர்கள் வில்லன்களாக ஜொலித்ததுண்டு.

    இவர்களில் சிலர் கதாநாயகர்களாக மாறிவிட்டாலும் தொடர்ச்சியாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர்கள் என்றால் அது நம்பியார், ரகுவரன் மற்றும் பிரகாஷ்ராஜ் தான்.

    என் உடலை ஏன் காட்டக்கூடாது?அடுத்த நிர்வாண போட்டோஷூட்..என்ன இப்படி ஆரம்பிச்சுட்டாங்க!என் உடலை ஏன் காட்டக்கூடாது?அடுத்த நிர்வாண போட்டோஷூட்..என்ன இப்படி ஆரம்பிச்சுட்டாங்க!

    ரகுவரன்

    ரகுவரன்

    முதலில் கதாநாயகனாக அறிமுகமாகி பின்னர் வில்லனாக நடிக்க ஆரம்பித்து மனிதன், புரியாத புதிர், காதலன், பாட்ஷா, அருணாச்சலம், முதல்வன் என காலத்தால் அழிக்க முடியாத வில்லன் கதாபாத்திரங்களிலும் அஞலி, ஆஹா, சிவாஜி, முகவரி, ரன் போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனது முத்திரையை ப்தித்துச் சென்றவர்தான் ரகுவரன்.

    புரியாத புதிர்

    புரியாத புதிர்

    இயக்குனர் கே. ரவிக்குமார் இயக்கிய முதல் திரைப்படமான புரியாத புதிர் படத்தில் "ஐ ணோ..." என்கிற ஒற்றை வசனம் மூலம் சைக்கோ வில்லனாகவும் புகழ்பெற்றவர். அன்றைய சூட்டிங் ரகுவரன் சரியான நேரத்திற்கு செல்லாமல், மிகவும் தாமதமாக சென்றதால் அந்தக் காட்சியை குறுகிய நேரத்தில் எடுக்கும்படி ஸ்பாட்டிலேயே மாற்றி எழுதினாராம் கே எஸ் ரவிக்குமார். மிகப் பெரிய வசனத்தை ஒரே வரியில் சுருக்கி "ஐ ணோ..." என்ற சொற்களை வெவ்வேறு விதமாக ரகுவரனை பேசச் சொல்லி அதனை படம் பிடித்தாராம். கிட்டத்தட்ட 18 முறை வெவ்வேறு மாடுலேஷனில் ரகுவரன் பேசிய அந்த வசனம் இன்று வரை பிரபலம்.

    யாரடி நீ மோகினி

    யாரடி நீ மோகினி

    ரகுவரன் இறந்த பின் 15 நாட்களில் வெளியான படம்தான் "யாரடி நீ மோகினி" அதில் தனுஷிற்கு தந்தையாக நடித்திருப்பார் ரகுவரன். அப்போது தனுஷ் கொடுத்திருந்த பேட்டியில் தானும் ரகுவரனும் கிட்டத்தட்ட ஒரே உயரத்தில் ஒல்லியாக வித்தியாசமான அப்பா மகனாக நடித்ததாகவும், இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாகவும் தனுஷ் அப்போது கூறியிருந்தார். அவருடன் ஒரே ஃபிரேமில் நடிக்கும் போது சிரமப்பட்டு நடித்தேன். காரணம் ரகுவரன் மிரட்டலாக நடிப்பார் என நடிகர் தனுஷ் கூறியிருப்பார். கந்தசாமி படத்திலும் அவர் நடித்திருந்தார். ஆனால் பாதி படத்தில் இறந்து போகவே அவருக்கு பதில் ஆஷிஷ் வித்யார்த்தியை வைத்து மீண்டும் ஷூட்டிங் நடத்தி இருந்தார்கள்.

    இசையமைப்பாளர் ரகுவரன்

    இசையமைப்பாளர் ரகுவரன்

    நல்ல நடிகர் என்பதைத் தாண்டி ரகுவரன் ஒரு இசையமைப்பாளரும் கூட. அவர் இசையமைத்த ஆல்பம் ஒன்றை அவர் இறப்புக்கு பின்னர் அவருடைய முன்னாள் மனைவியும் நடிகையுமான ரோகினி அதனை நடிகர் ரஜினிகாந்தை வைத்து வெளியிட்டிருந்தார்.

    English summary
    I struggled to act with Raghuvaran, Dhanush's throwback interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X