கைதி நான் பண்ண வேண்டிய படம்... கார்த்தி நடித்ததற்காக வருத்தப்படல.. நடிகர் விஜய் சேதுபதி!

சென்னை : தமிழ் தொடர்ந்து இப்பொழுது ஹிந்தி படங்களிலும் விஜய் சேதுபதி மும்முரமாக நடித்து வருகிறார்

மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்பொழுது விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

இந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி கைதி படத்தில் தான் ஹீரோவாக நடிக்க வேண்டி இருந்தது என்ற தகவலை பகிர்ந்துள்ளார்

 வில்லனாகவும்

வில்லனாகவும்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்ற வருகிறது தமிழையும் தாண்டி மற்ற மொழிகளிலும் விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது குறிப்பாக தமிழில் எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது அதே அளவிற்கு தெலுங்கிலும் விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் உள்ளதால் இவரது அனைத்து திரைப்படங்களும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. ஹீரோவாக நடிக்கும் அதே சமயம் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடிப்பதற்கு எந்த ஒரு முன்னணி ஹீரோவின் தயாராக இருப்பதில்லை ஆனால் நடிகர் விஜய் சேதுபதி எந்த ஒரு இமேஜை பற்றியும் கவலைப்படாமல் கதாபாத்திரத்திற்கு மற்றும் முக்கியத்துவம் கொடுத்து வில்லன் கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

 வெற்றிமாறன் இயக்கத்தில்

வெற்றிமாறன் இயக்கத்தில்

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது அதனைத் தொடர்ந்து இப்பொழுது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது

 விக்ரம் வேதா ஹிந்தி

விக்ரம் வேதா ஹிந்தி

விஜய் சேதுபதியின் படங்கள் பல பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருவதால் ஹிந்தியிலும் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக விக்ரம் வேதா ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காந்தி டாக்ஸ், ஃ பர்ஜி, மேரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார்.

 கைதி நான் பண்ண வேண்டிய படம்

கைதி நான் பண்ண வேண்டிய படம்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கைதி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நான்தான், ஆனா அது மிஸ் ஆயிடுச்சு. மிஸ் ஆனதற்காக நான் வருத்தப்படலை.. கார்த்தி ரொம்ப பிரமாதமா பண்ணி இருந்தார், அது ரொம்ப திருப்தியா இருந்துச்சு என அந்த நேர்காணலில் வெளிப்படையாக விஜய் சேதுபதி பேசியுள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X