தப்பான படத்துல நானும் நடிச்சிருக்கேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக கைநிறைய திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
இந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் பேசிய ப்ரியா பவானி சங்கர் நானும் தப்பான படங்களில் நடித்துள்ளேன் என மிக ஓப்பனாக பேசியுள்ளார்.

முக்கியமான ரோலில்
சின்னத்திரையில் தொடர்களில் நடித்த பிரபலமாக இருந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்பொழுது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக கலக்கி கொண்டு உள்ளார். இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் இப்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் மேயாதமான் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்

அருண் விஜய்க்கு ஜோடியாக
அதைத் தொடர்ந்து மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல் என பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றன. இந்த நிலையில் அடுத்ததாக அருண் விஜய்க்கு ஜோடியாக யானை படத்தில் நடித்துள்ளார் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் ஏற்கனவே மாபியா படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில் இப்போது இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணைந்துள்ள யானை திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக இருந்த இந்தியன்2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இப்பொழுது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும்
ஆரம்பம் முதலே குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள பிரிய பவனி சங்கர் இன்றுவரை கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். பொம்மை குருதி ஆட்டம் அகில ருத்ரன் திருச்சிற்றம்பலம் யானை பத்து தல உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் டூத என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்

தப்பான படங்கள்ல நானும் நடிச்சிருக்கேன்
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் தப்பான படங்கள்ல நானும் நடிச்சிருக்கேன் அந்த படம் ரிலீஸ் ஆகியும் விட்டது என மிக ஓப்பனாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











