கண்டக்டரா இருக்கும் போது பொண்ணுங்க பக்கத்துல தான் நிப்பேன்.. ரஜினி சொன்ன ஃபிளாஷ்பேக் ஸ்டோரி!
சென்னை: 70களில் இருந்து இன்று வரை தனது ஸ்டைலாலும், நடிப்பாலும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.
1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானார் ரஜினிகாந்த்.
தற்போது சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் ரஜினிகாந்த், ஆரம்ப காலத்தில் பஸ் கண்டக்டர் ஆக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.. அந்த சமயத்தில் தான் செய்த பல சுட்டித்தனமான சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

ஆரம்பமே அசத்தல்
1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், தனது அசாத்திய நடிப்பாலும், தனது தனித்துவமான ஸ்டைலாலும் தற்போது வரை முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான 16 வயதினிலே, 6 புஷ்பங்கள், 6முதல்60 வரை போன்ற பல படங்கள் இவர் நடிப்புக்கு பேர் போனவை. அன்று முதல் இன்று வரை தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

தனித்துவமான நடிப்பு
ஸ்ரீ ராகவேந்திரர், மிஸ்டர் பாரத், படிக்காதவன், ஊர்க்காவலன், வேலைக்காரன், ராஜாதி ராஜா, படையப்பா போன்ற பல படங்கள் இவரின் கேரியருக்கு முக்கிய படமாக அமைந்தது. பல முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பலரையும் தனது ஸ்டைலுக்கு அடிமையாக்கி வைத்துள்ளார். படத்தில் இவர் சிகரெட் தூக்கி போட்டு வாயில் பிடிப்பது, தலையை கோதுவது, துப்பாக்கியை சுழற்றுவது என்று இவரது ஸ்டைல்கள் அனைத்தும் தனி ரகம் தான். இவரது நடைக்கும் பேச்சுக்கும் குழந்தைகளும் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர்.

ஸ்டைலுக்காக வசனங்கள்
ஹீரோவாக நடிக்க துவங்கிய 70களில் இருந்து சமீபத்தில் வெளியான படங்கள் வரை இவரது ஸ்டைலுக்கு என்று ஹிட் கொடுத்த படங்கள் லிஸ்ட்டும் அதிகம் தான். இவரது ஸ்டைலை புகழ்ந்து சொல்லும் அளவிற்கு பல டயலாக்குகளும் பாடல்களும் உருவாக்கப்பட்டன. ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான், வயசானாலும் உங்க அழகும் ஸ்டைல உங்கள விட்டு போகல, நீங்க எது பண்ணாலும் ஸ்டைல் தான் என்று இவருக்காகவே எழுதப்பட்ட வசனங்கள் பல உண்டு.

பழசை மறக்காத ரஜினி
இன்று சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப கட்டத்தில் பஸ் கண்டக்டர் ஆக இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சிவாஜி ராவ் என்ற இவரது இயற்பெயர் நடிக்க துவங்கிய பிறகு ரஜினிகாந்த் ஆக மாறியது. தான் கண்டக்டராக இருந்தபோது செய்த பல சேட்டைகளை ஃப்ளாஷ் பேக் ஸ்டோரியை கூறியுள்ளார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் கூறுகையில் மற்ற கண்டக்டர்கள் டிக்கெட் கொடுக்க அரைமணி நேரம் செய்வார்கள் ஆனால் நான் 10 நிமிடத்திற்குள்ளேயே டிக்கெட் அனைத்தையும் கொடுத்து முடித்து விடுவேன்.

பொண்ணுங்க பக்கத்துல நிப்பேன்
பஸ்ஸில் முன் சீட்டுகளில் பெண்களையும், பின் சீட்டுகளில் ஆண்களையும் உட்கார வைத்து விடுவேன். பெண்கள் இருக்கும் இடத்தில் நான் நின்று கொள்வேன். காத்து வேகமாக அடிக்கும் பொழுது என் முடி வேகமாக பறக்கும். பஸ் ஸ்டாப்பிங் நிறுத்தும் பொழுது என் முடியை ஸ்டைலாக கோதிவிட்டு டிக்கெட் டிக்கெட் என்று மீண்டும் பெண்கள் இருக்கும் பக்கத்தில் செல்வேன் என்று ஜாலியாக தனது ஃப்ளாஷ்பேக் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.


Click it and Unblock the Notifications











