twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தடம், தீயா வேல செய்யணும் குமாரு படங்களில் நான் நடிக்க வேண்டியது... உதயநிதி கலகலப்பான பேச்சு

    |

    சென்னை: தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற நல்ல படங்களை இயக்கியுள்ள மகிழ் திருமேனி தற்சமயம் இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன்.

    உதயநிதி ஸ்டாலின், ஆரவ், நிதி அகர்வால் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உதயநிதி கலகலப்பாக பேசியுள்ளார்.

    3 ஆண்டுகள் படப்பிடிப்பு

    3 ஆண்டுகள் படப்பிடிப்பு

    கலகத் தலைவன் படத்தினுடைய படப்பிடிப்பு மொத்தம் 70 முதல் 80 நாட்கள் வரை தான் எடுக்கப்பட்டதாம். ஆனால் 2019-ல் துவங்கப்பட்டு தற்சமயம்தான் முடிவடைந்துள்ளது. அதில் நடிக்க ஆரம்பித்த பின்னர்தான் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் ஒப்பந்தமாகி, அதில் நடித்து முடித்து, படம் வெளியாகி அதற்கு வெற்றி விழா கொண்டாடிவிட்டு மீண்டும் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடித்ததாகவும், இயக்குநர் மகிழ் அவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும் வேடிக்கையாக கலாய்த்திருந்தார் உதயநிதி.

    மாமன்னன்

    மாமன்னன்

    மகிழ் திருமேனியாவது பரவாயில்லை 70 நாட்களில் விட்டுவிட்டார். ஆனால் மாரி செல்வராஜ் 120 நாட்கள் மாமன்னன் படத்தை எடுத்துக் கொண்டே இருக்கிறார். இன்னும் அதனுடைய படப்பிடிப்பு முடியவில்லை. சைக்கோ திரைப்படத்தை பொருத்தவரை எனக்கு பிரச்சனையே இல்லை. காரணம், மிஷ்கின் அதிகமாக கால்களுக்கு ஷாட் வைப்பதால் பெரும்பாலும் டூப்பை வைத்து எடுத்துவிட்டார். இதில் அருண் ராஜா மட்டும்தான் 40 நாட்களில் படப்பிடிப்பை முடித்து வெளியிட்டார் என்று உதய கூறியிருந்தார்.

    இரண்டாம் பாகம்

    இரண்டாம் பாகம்

    இரண்டாம் பாகம் எடுக்கக்கூடிய டிரெண்ட் இப்போது இருப்பதால் சைக்கோ, நெஞ்சுக்கு நீதி படங்களுக்கு இரண்டாம் எடுக்கச் சொல்கிறார்கள். ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்க முடியாது. காரணம், ஹன்சிகாவிற்கு திருமணம் நடக்கப் போகிறது, சந்தானம் தனது பாடி லாங்குவேஜில் இருந்து முற்றிலுமாக மாறி கதாநாயகனாக நடிக்க துவங்கிவிட்டார். அதனால், மாமன்னன் படத்திற்கு பின் தனது ஃபோன் நம்பரை மாற்றிவிட்டு அரசியல் வேலையை பார்க்கப் போவதாக கூறியுள்ளார்.

    தவறிய படங்கள்

    தவறிய படங்கள்

    அந்த நிகழ்ச்சியில் மிஷ்கின், ராஜேஷ், சுந்தர்.சி, மாரி செல்வராஜ், அருண் ராஜா, பிரதீப் உள்ளிட்ட பல இயக்குநர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களில் சுந்தர்.சி இயக்கத்தில் மட்டும் நடிக்கவில்லை. அவருடைய தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நான்தான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் ராஜேஷ் அந்தக் கதை உங்களுக்கு சரி வராது என்று கூறிவிட்டார். அதேபோலத்தான் தடம் படத்தையும் சில காரணங்களால் தவறவிட்டேன் என்று உதயநிதி கூறியிருக்கிறார்.

    English summary
    Kalaga Thalaivan movie, director Mazghil Thirumeni, Udhayanidhi Stalin, கழகத் தலைவன் திரைப்படம், இயக்குநர் மகிழ் திருமேனி, உதயநிதி ஸ்டாலின்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X