twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கால் அமுக்குற மாதிரில்லாம் நடிக்க முடியாது... வடிவேலு விலக விவேக் உள்ளே வந்த கதை

    |

    சென்னை: பொதுவாக அனைத்து படங்களிலும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போய்விடும்.

    கால் ஷீட் பிரச்சனை, சம்பளப் பிரச்சனை, இயக்குநர் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடு, உடல் நலம் என்று பல காரணங்களால் ஒவ்வொரு படமும் இது போன்ற நிகழ்வுகளை சந்திக்கும்.

    அந்த வகையில் படிக்காதவன் திரைப்படத்தில் நடிகர் விவேக் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் வடிவேலு தான் சில நாட்கள் நடித்தார்.

    அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்யா? ரஜினியா? அஜித்தா? கமலா?...டாப் இடம் யாருக்கு தெரியுமா? அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்யா? ரஜினியா? அஜித்தா? கமலா?...டாப் இடம் யாருக்கு தெரியுமா?

    தனுஷுடன் மோதல்

    தனுஷுடன் மோதல்

    கால்ஷீட் நாட்களை அதிகப்படுத்துவதற்காக வடிவேலு அதிக டேக்குகள் வாங்குவார் என ஒரு குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. அப்படி இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நிறைய டேக்குகள் வாங்கியதால்,"சீக்கிரம் லைட்டிங் செட் பண்ணுங்க பா அண்ணனுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் பில்லு கூடிட்டே போகுது" என்று இயக்குநர் சுராஜ் சொல்ல வடிவேலு அவரை முறைத்துள்ளார். அதற்குப் பின்னரும் அவர் அதிக டேக்குகள் எடுத்துக் கொள்ள,"அண்ணே டைரக்டர் சொல்ற மாதிரி நடிங்கண்ணே. ஏன் திரும்பத் திரும்ப டேக் வாங்குறீங்க" என்று தனுஷ் கேட்க வடிவேலு தனுஷையும் பார்த்து முறைத்து விட்டு பின்னர் அந்தக் காட்சிகள் நடித்து முடித்திருக்கிறார்.

    சுமன் காட்சி

    சுமன் காட்சி

    அந்தப் படத்தில் விவேக் மற்றும் சுமன் வரும் காட்சிகள் மக்களால் அதிகம் வரவேற்கப்பட்டவை. குறிப்பாக விவேக் பாத்ரூமில் கண்ணாடி முன்பு அழுவது அனைவரையும் சிரிக்க வைத்து விடும். முதலில் சுமனுடனான காட்சியை நடிகர் வடிவேலுவிடம் விளக்கியுள்ளார் இயக்குநர் சுராஜ். அப்போது கால் அமுக்கி விடும்படி காட்சி இருந்ததால் அதில் நடிக்க மறுத்தாராம் வடிவேலு.

    நா எவ்ளோ பெரிய நடிகன்

    நா எவ்ளோ பெரிய நடிகன்

    காட்சி நன்றாக வரும் என்று இயக்குநர் சொல்லவே, தமிழ்நாட்டில் நான் எவ்வளவு பெரிய நடிகன். அவரது காலையெல்லாம் என்னால் அழுத்துவது போல் நடிக்க முடியாது என்று கூறிவிட்டு பின்னர் வயிற்று வலி வந்து விட்டதாக கூறி தன் அறைக்கு திரும்பச் சென்றுள்ளார். பின்னர் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து சென்னை திரும்பியதாகவும் வடிவேலு பகுதிகளை எடுப்பதற்காகவே 12 நாட்கள் ஸ்கெடியூல் போட்டு அங்கு படப்பிடிப்பிற்கு சென்ற பட குழுவினர் அவர் இல்லாததால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர்.

    விவேக் எண்ட்ரி

    விவேக் எண்ட்ரி

    அதன் பின்னர் தான் நடிகர் விவேக்கை அந்தக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்து மீண்டும் அந்த படப்பிடிப்பை நடத்தினர். எந்தவிதமான தயக்கமும் இன்றி விவேக் கால் அமுக்கிவிடும் அந்த காட்சியில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் என இந்தச் சம்பவத்தை பார்த்த நடிகர் மீசை ராஜேந்திரன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

    English summary
    I wont act like this, Vivek Statement Statement Paved the Way for vadivelu to become Star
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X