ஒரு தடவ யூஸ் பண்ண பொருள இன்னொரு தடவ யூஸ் பண்ணமாட்டேன்.. வடிவேலு ஸ்டைலை பின்பற்றும் நளினி!

சென்னை: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி போன்ற பலரும் நடித்திருந்த ராணுவ வீரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நளினி.

ஓம் சக்தி, சரணாலயம், மனைவி சொல்லே மந்திரம், தங்கைக்கோர் கீதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டும் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நளினி. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்று வரை

அன்று முதல் இன்று வரை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் இன்று இருக்கும் முன்னணி நடிகர்கள் வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நளினி . 2000 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிருஷ்ணதாசி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார் நடிகை நளினி. இவர் நடித்த தொடர்களில் கோலங்கள், சின்ன பாப்பா பெரிய பாப்பா, மாதவி, வாணி ராணி, சந்திரலேகா, கோகுலத்தில் சீதை போன்ற பல ஹிட் தொடர்களும் உண்டு.

மாறாத நடிப்பு

மாறாத நடிப்பு

தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வள்ளி திருமணம் என்ற தொடரில் நடித்து வருகிறார். 80களில் இருந்து இன்று வரை தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகை நளினி. வம்ச விளக்கு, எழுதாத சட்டங்கள், உறவை காத்த கிளி, ராஜரிஷி போன்ற பல படங்களில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை நளினி.

கண்கவரும் அழகு

கண்கவரும் அழகு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலத்தில் இருந்து இப்பொழுது இருக்கும் முன்னணி நடிகர்கள் வரை பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது எதார்த்தமான பேச்சுக்கும், சிரிப்புக்கும் தமிழ் பேசும் ஸ்டைலுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நடிகை நளினி தன்னை பற்றி கூறிய விஷயங்கள் பலரால் பகிரப்பட்டு வருகின்றது. எப்பொழுதும் அழகான புடவை, ஆடை அணிகலன் என்று அழகாக இருப்பவர் நளினி. தற்போது இதற்கான சீக்ரெட் வெளிவந்துள்ளது.

வடிவேலு ஸ்டைல்

வடிவேலு ஸ்டைல்

பொதுவாகவே நடிகைகள் இடத்தில் அதிகமாக விதவிதமான உடைகளும் நகைகளும் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் நளினி கூறிய இந்த விஷயம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது ட்ரெஸ்ஸிங் சென்சை பற்றி அவர் கூறுகையில். நான் ஒரு தடவ கட்டின புடவையை மறுமுறை கட்டவே மாட்டேன். எப்பொழுதும் புதிய புடவை வாங்கிக் கொண்டே தான் இருப்பேன். ஷூட்டிங் சென்றாலும் அங்கிருக்கும் பிரபல கடைகளில் நான் காட்டன் புடவையாவது வாங்கி விடுவேன். புடவை வாங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

தனி வீடே இருக்கு

தனி வீடே இருக்கு

புடவையை வைப்பதற்கு என்று ஒரு தனி வீடே வைத்துள்ளேன். கட்டிய புடவைகள் எல்லாம் அங்கே வைத்து விடுவேன் என்று கூறியுள்ளார் நடிகை நளினி. இன்று புதிய புடவை இருக்கிறதா என்று எனது பிள்ளைகளும் கேட்பார்கள் இல்லை என்றால் உடனே வாங்கி கொடுத்து விடுவார்கள். என்று வடிவேலு பாணியில் கூறியுள்ளார் நடிகை நளினி. இதைக் கேட்ட பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை கமெண்ட்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X