விஜய்க்கு கைதி மாதிரி ஒரு படம் பண்ணனும் தான் ஆசை.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வரும் நிலையில் இந்திய அளவில் அவரது மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது

மாநகரம் கைதி மாஸ்டர் என தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ள விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்துள்ளது

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு கைதி போல ஒரு படம் பண்ண வேண்டும் என்றுதான் ஆசை என தன்னிடம் கூறியதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது

அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் இப்பொழுது இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கப்படுகிறது மாநகரம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதை தொடர்ந்து இயக்கிய கைதி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. கைதி மிகப்பெரிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருக்க அதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்தார்.

ஹாட்ரிக் வெற்றி அடைந்த

ஹாட்ரிக் வெற்றி அடைந்த

விஜய் விஜய்சேதுபதி ஆண்ட்ரியா மாளவிகா மோகனன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த மாஸ்டர் திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹாட்ரிக் வெற்றி அடைந்த நிலையில் அடுத்ததாக தனது குருவான கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வந்தார் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த இந்த படத்தில் கமல்ஹாசன் படத்தில் விஜய் சேதுபதி நரேன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது

பல்வேறு சாதனைகளை முறியடித்து

பல்வேறு சாதனைகளை முறியடித்து

பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் வெளியான விக்ரம் திரைப்படம் இப்பொழுது திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக சக்கை போடு போட்டு உலக அளவில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. அடுத்ததாக மீண்டும் விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்க தயாராகி கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த முறை முழுக்க முழுக்க தன்னுடைய ஸ்டைலில் அந்த படம் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

விஜய்க்கு கைதி மாதிரி படம் பண்ணனும் ஆசை

விஜய்க்கு கைதி மாதிரி படம் பண்ணனும் ஆசை

இந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கைதி படத்தை பார்த்துவிட்டு தான் விஜய் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று கூறினார். ஆனால் விஜய்க்கு நிஜமாகவே கைதி போல ஒரு படத்தை பண்ண வேண்டும் என்றுதான் ஆசை ஆனால் அவரை சுற்றி உள்ள மார்க்கெட், அவரை சுற்றி நடக்கும் வியாபாரங்களால் தான் அது போன்ற படங்களில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் என விஜய் தன்னிடம் கூறியதாக லோகேஷ் கனகராஜ் அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X