விஜய் சார் படத்துல ஜூனியர் ஆர்ட்டிஸ்டா நடிக்கவும் தயார் ... ஜெய்

சென்னை: நடிகர், இசையமைப்பாளர், பாடகர்னு பன்முகங்களை கொண்டவர்தான் ஜெய்.

சுந்தர்.சி கதாநாயகனா நடிச்சிருக்க பட்டாம்பூச்சி படத்துல முதல் முறையா ஜெய் வில்லனா நடிச்சிருக்காரு.

வர ஜூன் 24-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகள்ல ரிலீஸ் ஆகுது.நடிகரா மட்டும் இல்லாம இந்தப் படத்துல ஒரு கானா பாடலுக்கும் இசையமைச்சு, தன்னோட பெரியப்பாவும் இசையமைப்பாளருமான தேவா அவர்கள பாட வைத்தார் ஜெய் .

ஜெய் சமீப காலங்களில் மிகவும் புத்துணர்ச்சியுடன் எல்லா பேட்டிகளிலும் காணப்படுகிறார். அதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய இலக்கு மீது கொண்ட வெறி ஒரு பக்கம் மற்றும் இசை மீது கொண்ட ஆர்வம் ஒரு பக்கம் .

பகவதியில் ஜெய்

பகவதியில் ஜெய்

இயக்குநர் வெங்கடேஷ் அவர்கள் இசையமைப்பாளர் தேவா ஸ்டூடியோல கம்போஸிங் செஷனுக்காக போனப்ப, அங்கதான் ஜெய்ய மொத மொதல்ல பாத்திருக்காரு. அப்பதான் நடிகர் விஜய்ய வச்சி பகவதி படத்த டைரக்ட் பண்ண ஒப்பந்தமாகி இருந்தாரு. ஜெய்ய பாக்குறதுக்கு தளபதி விஜய் சாயல் இருந்ததால, உடனே பகவதி படத்துல அவர தம்பியா நடிக்க வச்சாரு இயக்குநர் வெங்கடேஷ்.

ஜெய் - விஜய்

ஜெய் - விஜய்

பட்டாம்பூச்சி படத்த பத்தி ஜெய் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி குடுத்தப்ப, தளபதி விஜய பத்தி சிலாகிச்சு பேசி இருக்காரு. தன்னோட மொதல் படத்துலையே விஜய்க்கு தம்பியா நடிக்க வாய்ப்பு கெடச்சாலும், பயத்துனால அதுல சிறப்பா நடிக்க முடிலன்னும், திரும்ப எப்படா அவரோட படத்துல நடிக்க கூப்பிடுவாருன்னு காத்துக்கிட்ருக்குறதாகவும் சொல்லியிருக்காரு. எப்ப அவர சந்திக்க வாய்ப்பு கெடச்சாலும் நடிக்க ஏதாவது சான்ஸ் குடுங்கண்ணான்னு கேப்பாராம்.

விஜய் பதில்

விஜய் பதில்

ஜெய் நடிக்க வாய்ப்பு கேக்குறப்ப, நீதான் ஹீரோ ஆகிட்டியே, அப்புறம் எதுக்கு என் கூட நடிக்க ஆசப்படுற. அது மட்டும் இல்லாம என் படங்கள பாக்குறல்ல, உனக்கு செட் ஆகுற மாதிரி எந்தப் படத்துல எந்த ரோல் இருந்துச்சு சொல்லுன்னு விஜய் கேட்டப்ப, பெரிய ரோல்லாம் வேணாண்ணா. சும்மா உங்க கூட அட்மாஸ்ஃபியர்ல வர ஜூனியர் ஆர்ட்டிஸ்டா நடிச்சா கூட போதும்னு ஜெய் சொல்லுவாராம்.

விஜய்யின் அட்வைஸ்

விஜய்யின் அட்வைஸ்

ஜெய்க்கு தொடர் தோல்விகளா இருந்த காலக்கட்டத்துல, விஜய சந்திக்க அவருக்கு வாய்ப்பு கெடச்சிருக்கு. அப்ப, ஹீரோவா ஒரு நாலஞ்சு படம் தோல்வி ஆகும். ஆனா அத ஐஞ்சாவது ஆறாவது படத்துலையே சரி கட்டிரணும். தோல்விய பாத்து பயப்படக் கூடாதுன்னு ஜெய்க்கு அட்வைஸ் பண்ணாராம்

Recommended Video

Thalapathy Birthday | விஜய் ரசிகர்கள் இரத்த தானம்... *Kollywood | Filmibeat Tamil
விஜய்யின் இன்னொரு முகம்

விஜய்யின் இன்னொரு முகம்

பொதுவா நடிகர் விஜய் யார்கிட்டையும் அதிகமா பேச மாட்டாருன்னுதான் எல்லாரும் நெனச்சிக்கிட்ருக்காங்க. ஆனா சூப்பரா பேசுவாரு. தனிப்பட்ட முறைல அவர சந்திக்கும்போதெல்லாம் கலகலப்பா இருப்பாரு. விஜய்னு சொன்னாலே அவரோட எனர்ஜி, கான்ஃபிடென்ஸ், தன்னத்தானே மோல்ட் பண்ணிக்கிட்ட விதம், இதெல்லாந்தான் எனக்கு ஞாபகத்துக்கு வரும்னு ஜெய் தளபதி விஜய பத்தி சொல்லி இருக்காரு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X