சிம்பு கூட ஒர்க் பண்றது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இயக்குநர் விக்னேஷ் சிவன்!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார்

காத்துவாக்குல ரெண்டு காதல் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் 62 வது படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் தனியாக யூடியூப் சேனல் நேர்காணலில் சிம்புவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

யாரும் நடிக்க முன்வரவில்லை

யாரும் நடிக்க முன்வரவில்லை

காதல் படங்களை இப்போது உள்ள தலை முறைக்கு ஏற்றவாறு ட்ரெண்டிங்காக எடுக்கக்கூடிய இளம் இயக்குநர்களில் மிகவும் தனிச்சிறப்புமிக்கவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். போடா போடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இவருக்கு இரண்டாவது படம் கிடைப்பதற்கு பெரும் சவாலாக இருந்தது. நானும் ரவுடி தான் கதையை பல நடிகர்களிடம் கூறி வந்த நிலையில் அந்த படத்தில் அவ்வளவு எளிதில் யாரும் நடிக்க முன்வரவில்லை

நானும் ரவுடி தான்

நானும் ரவுடி தான்

இந்த நிலையில் இறுதியாக வேறு வழியில்லாமல் விஜய் சேதுபதியிடம் உதவியாக நடிக்கச் சொல்லி கேட்டதற்கிணங்க விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. நானும் ரவுடி தான் வெற்றிக்கு பிறகு அனைவராலும் கவனிக்கக் கூடிய மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறிய விக்னேஷ் சிவன் அடுத்ததாக தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். பிரபல ஹிந்தி படத்தின் தழுவலாக வெளியான இந்த படமும் வெற்றி பெற்று நல்ல கலெக்ஷனை அள்ளியது.

முக்கோண காதல் கதை

முக்கோண காதல் கதை

இந்த நிலையில் நானும் ரவுடி தான் கூட்டணி மீண்டும் இணைந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு வெளியான இந்த படத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா என மூவர் நடித்திருப்பார்கள். இரண்டு பெண்கள் ஒரு ஆணை விடாமல் காதலித்தால் எப்படி இருக்கும் என்பதை மிகவும் சுவாரசியமாகவும் கவித்துவமாக கூறியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அஜித் 62வது படத்தை இயக்கி விக்னேஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்.

சிம்பு கூட ஒர்க் பண்றது ரொம்ப பிடிக்கும்

சிம்பு கூட ஒர்க் பண்றது ரொம்ப பிடிக்கும்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய விக்னேஷ் சிவன் எனக்கு சிம்புவுடன் இணைந்து பணியாற்றுவது ரொம்பவே பிடிக்கும். ரொம்பவே என்ஜாய் பண்ணுவேன். அவருக்கு மியூசிக் சென்ஸ்,லிரிக்ஸ் சென்ஸ்ன்னு இருக்கிறது.. போடா போடி கதையை முதல் முறை சிம்புவிடம் கூறியபோது நீயாடா இந்த கதையை எழுதின என ஆச்சர்யத்துடன் என்னிடம் கேட்டார். நல்லாதான் கதை எழுதுற என என்னோட எழுத்துக்களின் மீது நம்பிக்கை கொடுத்தவர் சிம்புதான்.. அந்த நம்பிக்கைதான் என்னை இப்போது இயக்குநராக ஆகியுள்ளது என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X