twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்கள சீண்டுனா நா வருவேன்... தானுவிற்கு விஜயகாந்தின் மாஸ் சப்போர்ட்

    |

    சென்னை: சமீபத்தில் பார்த்திபன் அவர்களின் இரவின் நிழல் திரைப்படத்தை விநியோகம் செய்திருந்தார் தயாரிப்பாளர் தானு.

    Recommended Video

    'விஜயகாந்த் மாதிரி யாரையும் பாக்கல..'- SA Chandrasekhar Interview | Part 1 | Filmibeat Tamil

    அடுத்ததாக இயக்குநர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கம் வாடிவாசல் திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் நேற்றைய முன்தினம் நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தானு கொடுத்த ஒரு பேட்டி ஒன்று யூடிபில் வெளியானது.

    “லைகர் படத்தின் தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திமிரு தான் காரணம்”: குற்றம்சாட்டும் தியேட்டர் ஓனர் “லைகர் படத்தின் தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திமிரு தான் காரணம்”: குற்றம்சாட்டும் தியேட்டர் ஓனர்

    தொடர் கூட்டணி

    தொடர் கூட்டணி

    தானு முதன் முதலில் தயாரித்திருந்த திரைப்படம் 'யார்'. அதன் பிறகு கூலிக்காரன் என்கிற படத்தை விஜயகாந்த் நடிப்பில் தயாரித்திருந்தார். அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படம்தான் விஜயகாந்தின் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படமாக அப்போதிருந்ததாம். கிட்டத்தட்ட 46 லட்சங்கள் அந்தப் படம் வசூலித்திருந்ததாம். ஆனால் அதன் பிறகு கூலிக்காரன் திரைப்படம்தான் அதிக வசூல் செய்ததாம். விஜயகாந்தின் படம் ஒரு கோடி வசூலை முதலில் தொட்டது என்றால் அது கூலிக்காரன்தான் என்று தானு கூறியுள்ளார்.

    இயக்குநர் தானு

    இயக்குநர் தானு

    கூலிக்காரன் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து 'நல்லவன்' என்கிற படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை, எழுதி தானு தயாரிக்க இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். விஜயகாந்த் நடிப்பில் உருவான அந்தப் படமும் மிகப் பெரிய ஹிட்டானது. விஜயகாந்த் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக புதுப்பாடகன் என்கிற படத்தை எழுதி, தயாரித்தது மட்டுமில்லாமல் இசையமைத்து, பாடல்கள் எழுதி, இயக்கவும் செய்திருந்தார் தானு. ஆனால் அந்தப் படம் பெரிதாக ஓடாததால் அத்தோடு இனி படங்களை இயக்க வேண்டாம் என்று முடிவுக்கு வந்தாராம் தானு.

    விஜயகாந்தின் பொற்காலம்

    விஜயகாந்தின் பொற்காலம்

    விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது சினிமாவிற்கு பொற்காலமாக இருந்தது. நடிகர் சங்கம் மிகப்பெரிய கடனில் இருந்தபோது அனைத்து நடிகர்களையும் ஒன்று திரட்டி மலேசியா, சிங்கப்பூர் என கலை நிகழ்ச்சிகள் நடத்தி அந்தக் கடனை அடைத்து லாபத்தையும் ஈட்டுக் கொடுத்தார் விஜயகாந்த். அது போன்று எவராலும் செய்ய முடியாது. 24 மணி நேரமும் பசியோடு இருந்தவர்களுக்கு உணவளித்த வள்ளல் அவர் என்று வெகுவாக பாராட்டியிருக்கிறார்.

    தோள் கொடுத்த விஜயகாந்த்

    தோள் கொடுத்த விஜயகாந்த்

    ஒருமுறை சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு குரூப் தொடர்ச்சியாக தொல்லைகள் கொடுத்திருந்த காலகட்டத்தில் அந்த குரூப் அடுத்ததாக தானுவை குறி வைத்துள்ளதாக விஜயகாந்தின் காதுகளுக்கு செய்திகள் போய்யுள்ளது. உடனே தாணுவிற்கு கால் செய்து,"சார் உங்களதான் அந்த குரூப் டார்கெட் பண்ணி இருக்காங்க. உங்கள தொட்டாங்க நானே களத்துல எறங்குவேன்" என்று தனக்கு உறுதுணையாக இருந்ததாக தானு விஜயகாந்த் பற்றி பல நெகிழ்வான சம்பவங்களை கூறியுள்ளார்.

    English summary
    If anybody teases you, i will come and support, vijayakanth reply to Dhanu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X