twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டைரக்டர் ஆகலேன்னா இந்த வேலைக்கு தான் போயிருப்பேன்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில பாத்தீங்களா?

    |

    சென்னை: தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ்.

    தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளார்.

    சினிமா டைரக்டர் ஆகவில்லை என்றால் நான் இந்த வேலைக்கு தான் போயிருப்பேன் என்று மனம் திறந்து கூறிய லோகேஷ் கனகராஜின் பதில் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றன.

    சூரியவம்சம் மாதிரி படம் கொடுக்க கடினமாக உழைப்பேன்.. 25வது ஆண்டு கொண்டாட்டத்தில் சரத்குமார் உறுதி! சூரியவம்சம் மாதிரி படம் கொடுக்க கடினமாக உழைப்பேன்.. 25வது ஆண்டு கொண்டாட்டத்தில் சரத்குமார் உறுதி!

    இயக்குநராக அறிமுகம்

    இயக்குநராக அறிமுகம்

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தில் சந்தீப் கிஷன், ரெஜினா கஸன்ட்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆக்ஷன் திரில்லர் படமாக அமைந்திருந்த இந்த படத்தை எஸ்ஆர் பிரபு தயாரித்திருந்தார். இந்த படத்தில் சார்லி, முனிஸ்காந்த் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் கைதி.

    நல்ல வரவேற்பு

    நல்ல வரவேற்பு

    கைதி படத்தில் கார்த்தி முன்னணி நாயகனாக நடிக்க, நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியான், தீனா போன்ற பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். கைதியின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய பல சுவாரஸ்யமான சம்பவங்களையும்,சென்டிமென்ட்டும் கலந்து எடுக்கப்பட்ட படம் தான் கைதி. இந்த படத்தின் மேக்கிங்கை பார்த்து ஆச்சரியபடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழ் திரையுலகில் தன்னை முன்னணி இயக்குநர்களில் ஒருவராக நிலைநிறுத்திக் கொண்டார்.

    மாஸ்டர் வேற லெவல்

    மாஸ்டர் வேற லெவல்

    கைதிக்கு பிறகு இவர் இயக்கிய திரைப்படம் மாஸ்டர். விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மாஸ்டர் திரைப்படமும் கைதிகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமாக அமைந்தது. மாஸ்டர் திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர் வெற்றிக்கு பிறகு கமலுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு லோகேஷ்க்கு விக்ரம் படத்தின் மூலம் அமைந்தது.

    விக்ரம் வசூல் வேட்டை

    விக்ரம் வசூல் வேட்டை

    கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசனுக்கும் இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. உலகம் முழுவதும் இந்த படம் தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக விக்ரம் படக்குழுவினர் பலருக்கும் பல பரிசுப் பொருட்களை கொடுத்தும் விருந்துகள் வைத்தும் கொண்டாடி வருகின்றனர். பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர், நடிகைகளிடம் அதிகமாக கேட்கப்படும் கேள்வி என்னவென்றால் நீங்கள் இந்தத் துறைக்கு வரவில்லை என்றால் வேறு எந்த துறையில் வேலை செய்து இருப்பீர்கள் என்பது தான்.

    Recommended Video

    Vikram படம் BlockBuster-க்கும் மேல! Devi Sri Prasad | Kamal Haasan *Kollywood | Filmibeat Tamil
    வியக்க வைத்த பதில்

    வியக்க வைத்த பதில்

    இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் அந்த கேள்வியை கேட்டபோது அவர் கூறிய பதில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. "எனக்கு பிடித்த துறை மீம் கிரியேட்டர்ஸ். இயக்குநர்கள் ஒரு காட்சியை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு பல கோணத்தில் யோசித்து இயக்குகின்றனர், ஆனால் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ஒரு சின்ன காமெடி மூலம் அந்த விஷயத்தை மக்களிடத்தில் ஈசியாக கொண்டு சேர்க்கின்றனர். அதை மக்கள் ரசிக்கும் அளவிற்கு காமெடியாகவும் இருக்கின்றது". எனக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ஆக தான் இருப்பேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இவர் கூறிய இந்த பதில் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றது.

    English summary
    If i am not a director, I Would have choosed with Job Says Director Lokesh Kanagaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X