வசனத்துல 'டா' இருந்தா எடுக்க சொல்வாரு... பிக் பாஸ் அசீம் பற்றி சக நடிகர்

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியில் முக்கிய போட்டியாளராக விளங்குபவர் ஆசீம்.

தொலைக்காட்சியில் நடிப்பு, தொகுப்பு போன்றவற்றின் மூலம் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அசீம்.

சக போட்டியாளர்களால் பெரும்பாலும் வெளியே போக வேண்டும் என்று நினைக்கும் நபராக இருக்கும் ஆசீம் பற்றி அவரது சக நடிகர்கள் பேட்டி கொடுத்துள்ளார்கள்.

 பூவே உனக்காக

பூவே உனக்காக

பூவே உனக்காக என்னும் தொடரில் அசீம் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் அதில் கதாநாயகியாக நடித்த பெண்ணிற்கும் பிரச்சனை ஏற்பட்டதாம். வழக்கமாக கதாநாயகி காலை ஏழு மணிக்கே படப்பிடிப்பிற்கு வந்துவிடுவாராம். கர்ப்பமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்ததால் வயிற்றில் ஒரு தலகாணி வைத்துக் கொண்டே இரவு வரை நடிப்பாராம். ஆனால் அசீம் 11 மணி போலத்தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே வருவாராம்

 மேலும் தாமதம்

மேலும் தாமதம்

அதுமட்டுமின்றி, தான் நடிக்கும் காட்சிகளை இயக்குநருடன் விவாதித்து அரை மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டிய காட்சியை ஒன்றரை மணி நேரம் எடுக்க வேண்டியதுபோல் ஆக்கி விடுவாராம். அப்படி ஒரு நாள் காட்சி பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது, தாமதமாக வந்து இவ்வளவு நேரம் விவாதிக்க வேண்டுமா, நான் காலையிலிருந்து தலகாணி வைத்துக் கொண்டு நடிக்கிறேன் என்று கதாநாயகி சொல்ல அந்தப் பெண்ணை கடுமையான சொற்களால் திட்டியிருக்கிறார் அசீம்.

 நடிக்க மறுப்பு

நடிக்க மறுப்பு

கதாநாயகிக்கு ஆதரவாக அங்கிருந்து அனைத்து நடிகர்களும் பேசியுள்ளார்கள். அதில் நடிகை தேவி பிரியாவையும் மரியாதை குறைவாக பேசியிருக்கிறார் அசீம். இதனால் காலையிலிருந்து மாலை வரை நடிக்க மாட்டோம் என்று மொத்த நடிகர்களும் தங்களது அறைகளிலேயே இருந்துள்ளார்கள். பின்னர் மாலை ஆனதும், கேட்க வேண்டுமே என்பதற்காக எந்த குற்ற உணர்வும் இல்லாமல் சாரி என்று சொல்லி விட்டு சென்று விட்டாராம்.

 மதிப்பதே இல்லை

மதிப்பதே இல்லை

அவருடன் நடித்த அருண் குமார் என்பவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில், பூவே உனக்காக தொடரில் முதலில் வேறு நபர்தான் நடித்தார். அப்போது அனைவரும் ஒரே குடும்பம் போல இருந்தோம். அந்த நாடகம் முடிவு பெறம் சூழ்நிலையில்தான் அவருக்கு பதிலாக அசீம் நடிக்க வந்தார். அதன் பிறகு, எங்களுக்குள் ஒரு நெகட்டிவிட்டி வந்தது. அவர் யாரையும் மதிக்காததால் சிலர் அதிலிருந்து விலகிவிட்டார்கள். உடன் நடிப்பவர்கள் அசீம் கதாபாத்திரத்தை 'டா' என்று பேசும் வசனம் இருந்தால், எதற்கு 'டா' வருகிறது, அதையெல்லாம் எடுத்து விடுங்கள் என்று இயக்குநரிடம் கூறுவார். நீங்கள் பிக் பாஸ் வீட்டில் பார்ப்பது அவரது உண்மையான குணம்தான் என்று அருண் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X