இந்த வார்த்தை சொன்னா உங்க வீழ்ச்சி ஆரம்பம்.. ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் விஜய் சேதுபதி!

சென்னை: ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர நடிகராகவும் தன்னை ஒரு முன்னணி நடிகராக வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

வாழ்க்கையில் இந்த ஒரு வார்த்தையை மட்டும் சொல்லவே கூடாது, அப்படி சொன்னால் உங்கள் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்று அர்த்தம் என்று தனது சக்சஸ் ஸ்டோரியை ரசிகர்களுக்காக கூறியுள்ளார்.

எதார்த்த நாயகன் விஜய் சேதுபதி

எதார்த்த நாயகன் விஜய் சேதுபதி

எதார்த்த நடிப்புக்கு சொந்தக்காரரான விஜய் சேதுபதி, 2019 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற பல படங்களில் நடித்தார். தனக்கேற்ற கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஓவர் பில்டப் இல்லாமல் நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வரும் குறிப்பிட்ட சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எதார்த்த நடிப்புக்கு சொந்தக்காரரான விஜய் சேதுபதி, 2019 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற பல படங்களில் நடித்தார். தனக்கேற்ற கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஓவர் பில்டப் இல்லாமல் நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வரும் குறிப்பிட்ட சில கதைகளில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க வருகிறார்.

பிரொமான்டிக் ஹீரோ

பிரொமான்டிக் ஹீரோ

பொதுவாக ஹீரோவாக நடிப்பவர்கள் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு யோசிக்கும் சமயத்தில் நடிகர் விஜய் சேதுபதி சின்ன சின்ன ரோல்களிலும் நடித்து தனக்கென ஒரு தகுதியான நிலையை பெற்றுள்ளார். வில்லனாகவும் மிரட்டி வரும் விஜய் சேதுபதி, மக்கள் செல்வன் என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளார். பல முன்னணி நடிகைகளுடன் நடித்து வரும் விஜய் சேதுபதி 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஸ்டைல் வேண்டாம், சிக்ஸ் பேக் வேண்டாம்

ஸ்டைல் வேண்டாம், சிக்ஸ் பேக் வேண்டாம்

ஹீரோ என்றால் மிகவும் ஸ்டைலிஷ் ஆக இருக்க வேண்டும், சிக்ஸ் பேக் வைத்திருக்க வேண்டும் என்ற விதிகளை உடைத்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார் . நானும் ரவுடி தான் படம் வெற்றியான பிறகு விஜய் சேதுபதி இறைவி, தர்மதுரை, விக்ரம் வேதா, செக்க சிவந்த வானம், 96 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இவர் கொடூரமான வில்லனாகவும் நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் பல பாராட்டுகளையும் பெற்றது. சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படமான விக்ரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

சொல்ல கூடாத வார்த்தை

சொல்ல கூடாத வார்த்தை

மேடைகளிலும் சரி, பேட்டிகளிலும் சரி எதார்த்தமாக பதில் சொல்லி பலரின் கவனத்தை ஈர்க்கும் விஜய் சேதுபதி, சமீபத்தில் கூறிய விஷயம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விஜய் சேதுபதி கூறி இருப்பதாவது," எப்பொழுது ஒருவர் நான் இந்த விஷயத்தை கற்றுக் கொண்டு விட்டேன், எனக்கு இது தெரியும் என்று கூறுகிறார்களோ, அவர்கள் வாழ்வில் வீழ்ச்சி அடைய தொடங்கிவிட்டனர் என்று அர்த்தம், எந்த ஒரு மனிதனும் நான் கற்றுக் கொண்டு விட்டேன் என்ற வார்த்தையை சொல்லவே கூடாது, வாழ்க்கையில் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் உள்ளது.

வெற்றி பயணம்

வெற்றி பயணம்

எனக்கு தெரியும் என்ற வார்த்தை ஓவர் கான்பிடென்சை காட்டுகிறது. எப்பொழுதும் எனக்கு தெரியும் கற்றுக் கொண்டு விட்டேன் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் நாம் தினம் தினம் ஒவ்வொரு விஷயங்களை மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு தான் இருக்கின்றோம். அப்படி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார் இவர் கூறிய இந்த விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X