சர்வதேச இந்திப் பட விழா- கொழும்பு சென்ற விவேக் ஓபராய், லாரா தத்தா

வியாழக்கிழமை இந்த விழா தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்க வேண்டாம் என தமிழகத்திலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், புனீத் ராஜ்குமார் மற்றும் ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகம் என கிட்டத்தட்ட முக்கால்வாசி இந்தியத் திரையுலகமும் கொழும்பு போக மாட்டோம் என அறிவித்து விட்டனர்.
இதையடுத்து வருகிறவரைக்கும் லாபம் என்ற கணக்கில் கிடைத்தவர்களை வளைத்துப் பிடித்து கொழும்புக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை. அந்த வகையில் தேறாத நடிகர்களான விவேக் ஓபராய், ரிதேஷ் தேஷ்முக், பொமன் இரானி, மார்க்கெட் இல்லாத லாரா தத்தா உள்ளிட்டோர் கொழும்புக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
சுகததாஸா இன்டோர் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை இந்தப் பட விழா தொடங்குகிறது.
Comments
இந்தி நடிகர்கள் கொழும்பு இஃபா பாலிவுட் ரிதேஷ் தேஷ்முக் லாரா தத்தா விவேக் ஓபராய் bollywood colombo iifa hindi stars lara dutta ritesh deshmukh vivek oberoi


Click it and Unblock the Notifications