twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்வதேச இந்திப் பட விழா- கொழும்பு சென்ற விவேக் ஓபராய், லாரா தத்தா

    By Chakra
    |

    Vivek Oberoi and Lara Dutta
    கொழும்பு: சர்வதேச இந்திப் பட விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தி நடிகர்களான விவேக் ஓபராய், ரிதேஷ் தேஷ்முக், பொமன் இரானி, நடிகை லாரா தத்தா ஆகியோர் கொழும்பு வந்தடைந்துள்ளனர்.

    வியாழக்கிழமை இந்த விழா தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்க வேண்டாம் என தமிழகத்திலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், புனீத் ராஜ்குமார் மற்றும் ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகம் என கிட்டத்தட்ட முக்கால்வாசி இந்தியத் திரையுலகமும் கொழும்பு போக மாட்டோம் என அறிவித்து விட்டனர்.

    இதையடுத்து வருகிறவரைக்கும் லாபம் என்ற கணக்கில் கிடைத்தவர்களை வளைத்துப் பிடித்து கொழும்புக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை. அந்த வகையில் தேறாத நடிகர்களான விவேக் ஓபராய், ரிதேஷ் தேஷ்முக், பொமன் இரானி, மார்க்கெட் இல்லாத லாரா தத்தா உள்ளிட்டோர் கொழும்புக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

    சுகததாஸா இன்டோர் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை இந்தப் பட விழா தொடங்குகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X