ஸ்பெஷல்ஸ்
இசைஞானி இளையராஜாவின் அருமையான இசையுடன் அழகி, சொல்ல மறந்த கதை என்ற இருஅட்டகாசமான படைப்புகளைத் தந்தவர் இயக்குனர் தங்கர் பச்சான்.
இப்போது இளையராஜாவுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்.
தங்கர் பச்சான் தனது மூன்றாவது படமான தென்றலை இப்போது எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகைசுமித்ராவின் மகள் உமாவுக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.
தென்றல் படப் பாடல்கள் தொடர்பாக இளையராஜாவுடன் பேசியபோது அவருக்கே சில ஆலோசனைகளைக்கூறியுள்ளார் பச்சான்.
ஆனால், எப்போதும் தன் இசையில் குறுக்கீட்டை விரும்பாத ராஜா, படத்தை டைரக்ட் செய்வது மட்டுமே உங்களதுவேலை. பாட்டு, டியூனை நான் பார்த்துக் கொள்வேன்.
எனக்கு யோசனை சொல்லும் வேலையெல்லாம் வேண்டாம்என்று கட் அண்ட் ரைட்டாகக் கூறி விட்டாராம் இசைஞானி.
இதனால் அப்செட் ஆகிப் போன பச்சான் கொஞ்ச நாட்களுக்கு பட வேலைகளையே தள்ளிப் போட்டு விட்டார்என்கிறார்கள்.
தமிழின் மிக அருமையான இரு கலைஞர்கள் மோதுவது தமிழ் சினிமாவுக்கு நல்லதில்லையே..!


Click it and Unblock the Notifications











