க்யூக் கன் இளையராஜா!
இசைஞானி இளையராஜா மீண்டும் ஒரு ஆங்கிலப் படத்துக்கு இசையமைக்கப் போகிறாராம். படத்தின் பெயர் க்யூக் கன் முருகா (Cuke Gun Muruga).
ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப் போகும் இந்தப் படத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைக்கவுள்ளார்களாம்.ஆங்கிலப் படத்திற்கு இளையராஜா இசையமைப்பது புதிதில்லை. 1980களில் ரஜினி-அமிதாப் சேர்ந்த நடித்த பிளட் ஸ்டோன் ஆங்கில படத்திற்கு இசை அமைத்தார் ராஜா. அதைத் தொடர்ந்து இந்திய தயாரிப்பில் உருவான இரு படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
அண்மையில் இளையராஜா இசையமைத்து இளசுகளை ஆட வைத்த, அமிதாப் நடித்த, இந்திப் படம் சீனி கும் உலகம் முழுவதும் ரிலீசாகி மாபெரும் வெற்றிநடை போட்டு வருவது நினைவிருக்கலாம்.
அந்த படத்தில் இசையைக் கேட்ட பின்னர் தான் இளையராஜாவை நாடி வந்தாராம் க்யூக் கன் முருகா தயாரிப்பாளர்.
Comments
amitab அமிதாப் இசையமைப்பாளர் இந்தி இளையராஜா கோலிவுட் சென்னை பாப்புலர் தயாரிப்பு நிறுவனம் பாலிவுட் பிளட்ஸ்டோன் ரஜினி ஹாலிவுட் blood stone chennai hindi ilayaraja kollywood music director popular productions rajini


Click it and Unblock the Notifications