ஸ்பெஷல்ஸ்
பாவலர் கிரியேஷன்ஸ் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள இளையராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிதாக ஒரு படம் தயாரிக்கவுள்ளார்.
முன்பு போல இசையமைப்பதில் இளையராஜா பெரிய அளவு ஆர்வம் காட்டுவதில்லை என்ற பேச்சு உள்ளது. முக்கியமானவர்களின் படங்களுக்கு மட்டும்தனி கவனம் செலுத்தி இசையமைத்து வருகிறார் இளையராஜா.
இந் நிலையில் சொந்தத் தயாரிப்பில் புதிதாக ஒருபடத்தை எடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மலையாள டைரக்டர் வினயன் இந்தப் படத்தைஇயக்கலாம் என்று தெரிகிறது. காசி படத்துக்கு இசையமைத்தபோது வினயனின் திறமை கண்டு ஆச்சரியப்பட்டாராம் ராஜா.
இசையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகும் என்று தெரிகிறது. படத்தின் பாடல்களையும் கூட இளையராஜாவே எழுதுவார் என்றும்கூறுகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications