»   »  ராஜாவின் ரிங்டோன்கள்!

ராஜாவின் ரிங்டோன்கள்!

Subscribe to Oneindia Tamil

இளையராஜாவின் காலத்தால் அழிக்க முடியாத இன்னிசை பாடல்களின் ட்யூன்கள்செல்போன் ரிங் டோன்களாக மாறியுள்ளன.

லேட்டஸ்ட் ஹிட் பாடல்கள் இப்போது ரிங் டோன்களாக உருப்பெற்று காதுகளைகிழித்து வருகின்றன. இந்த நிலையில் இன்னிசை சக்கரவர்த்தி இளையராஜாவின்இன்னிசைப் பாடல்கள் பல ரீமிக்ஸ் ஆகி ரிங் டோன்களாகமாற்றப்பட்டுள்ளன.

இப்பாடல்களை ரீமிக்ஸ் செய்து ரிங் டோன்களாக மாற்றும் பணியை ராஜாவின் மகன்கார்த்திக் ராஜாவே மேற்கொண்டுள்ளார். இந்த திட்டத்திற்கு இளையராஜா ரூல்ஸ்என்று பெயரும் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து கார்த்திக் ராஜா கூறுகையில், இளையராஜாவின் ரிங் டோன்களைஆல்டோசிஸ் மற்றும் பைரோ மொபைல் நிறுவனங்கள் இணைந்து ஏர்செல் மூலம்வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளன.

இளையராஜாவின் பாடல்களை ரீமிக்ஸ் செய்வது சாமானியமான வேலை அல்ல.அதிலும் சிடியில் இதை வெளியிடுவது ரொம்ப சிரமமான வேலை. இதை சரியாகசெய்ய கூடுதல் அக்கறை எடுத்துள்ளேன் என்றார்.

செல்போன் மூலமாகவும் ராஜா லயிக்க வைக்க வருகிறார், வரவேற்போம்!

Read more about: ilayarajas ringtones
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil