»   »  கருணாநிதிக்காக தன் பிறந்தநாள் தேதியையே மாற்றிக் கொண்ட மாபெரும் ‘கலைஞர்’

கருணாநிதிக்காக தன் பிறந்தநாள் தேதியையே மாற்றிக் கொண்ட மாபெரும் ‘கலைஞர்’

Posted By:
Subscribe to Oneindia Tamil
கருணாநிதிக்காக தனது பிறந்தநாளை மாற்றிய இளையராஜா- வீடியோ

சென்னை: அரசியல், சினிமா, இலக்கியம் என பன்முகம் சாதனையாளரான கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளுக்காக, தன் பிறந்த தினத்தையே மாற்றிக் கொண்டு மரியாதை செய்தவர் தான் இசைஞானி இளையராஜா.

தமிழ் சினிமாவையும் இசைஞானி இளையராஜாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்தளவிற்கு தமிழக திரையுலக வரலாற்றில் அவரின் பங்கு மகத்தானது. 1,000 திரைப்படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்த அவரின் 75வது பிறந்தநாள் நாளை ( ஜூன் 3ம் தேதி) வருகிறது.

Ilayaraja changes his birthday date

ஆனால், ஆண்டுதோறும் ஜூன் 2ம் தேதியே தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் இளையராஜா.

காரணம் இது தான். திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்ததினம் ஜூன் 3ம் தேதி. அரசியல், சினிமா, இலக்கியம் என பன்முக சாதனையாளரான கருணாநிதி மீது, அன்பும், மரியாதையயும் வைத்துள்ள இளையராஜா அவருக்காக தன் பிறந்ததினத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக முன்பொரு பேட்டியில் அவர் கூறுகையில், "'ஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்த நாள். அவர் தமிழுக்காற்றிய தொண்டில் சிறு பகுதியைக் கூட நான் செய்யவில்லை. அவர் பிறந்த நாளில் நானும் பிறந்தது பெருமை. ஜூன் 3ம் தேதி தலைவர் கலைஞரைத்தான் தமிழகம் வாழ்த்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இன்று இளையராஜாவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் அந்த "இசைஞானி" பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தியவர் சாட்சாத் கருணாநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The music director Isaignani Ilayaraja had changed his birthday for respecting DMK president.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more