twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹங்கேரி இசைக் கலைஞர்களை வரவழைத்த இளையராஜா

    By Shankar
    |

    Ilayaraja
    அழகர்சாமியின் குதிரை படத்துக்காக ஹங்கேரி இசைக் குழுவைச் சேர்ந்த 5 கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

    சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அழகர்சாமியின் குதிரை. கவுதம் மேனனின் சொந்தப் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் இது. இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

    இதுகுறித்து சுசீந்திரன் கூறுகையில், "குரங்கணியை ஒட்டியுள்ள கேரள எல்லையில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். 70 நாள்களில் படம் முடிந்துள்ளது. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். படத்தில் குதிரை முக்கிய இடம் பிடிப்பதால் தேனி பகுதியில் இருந்த குதிரையை நடிக்க வைத்துள்ளோம். குதிரை சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுவதில் மிகுந்த சிரமம் இருந்தது.

    இளையராஜா படம் பார்த்தார். நெகிழ்ச்சியான பாராட்டுகளைத் தெரிவித்தார். வரும் 20-ம் தேதி இசையமைப்பு பணிகளை தொடங்குகிறார். ஹங்கேரியில் இருந்து 5 சிம்பொனி இசை கலைஞர்கள் இப்படத்துக்காக வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். ரீ ரெக்கார்டிங் புதுமையானதாக இருக்கும். அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். விக்ரம் ஜோடியாக தீபாசேத் நடிக்கிறார். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது'' என்றார் சுசீந்திரன்.

    English summary
    Isaignani Ilayaraja to compose background score for Suseenthiran's Azhagarsamiyin Kuthirai from Feb 20th. 5 Hungarian music artists will join with Ilayaraja in the composing works.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X