எம்.ஜி.ஆர் படத்துக்கு இளையராஜா இசை, வாலி கதை, வசனம், பாடல்கள்... பின் கைவிடப்பட்ட காரணம் தெரியுமா?

சென்னை: 2022-ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா அவர்களுடைய இசையில் இதுவரை எட்டு படங்கள் வெளியாகியுள்ளது.

மேற்கொண்டு 18 படங்களுக்கும் ஒரு வெப் சீரிஸ் இருக்கும் பல்வேறு மொழிகளில் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கவிஞர் வாலி முன்னதாக கொடுத்துள்ள ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆர் -ளையராஜா கூட்டணி பற்றி பேசியிருக்கிறார்.

நடிகனும் இசையும்

நடிகனும் இசையும்

நடிகர்களுடைய வளர்ச்சிக்கு இன்னும் சொல்லப்போனால் பிற்காலத்தில் அரசியலில் அவர்கள் வந்தால் கூட அவர்களுக்கு மிகப் பெரிய பலமாக இருப்பது அவர்களுடைய பாடல்களும் பாடல் வரிகளும். அந்த வகையில் இன்று வரை தேர்தல் நேரங்களில் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களை கேட்கக் கூடும். பொதுவாக அவர்கள் வளர்ந்து கொண்டே இருக்கும் பொழுது புதிய இசையமைப்பாளர்கள் திடீரென்று புயல் போல வந்தால் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பார்கள்.

இளையராஜா எனும் புயல்

இளையராஜா எனும் புயல்

இளையராஜா அவர்கள் வந்தபோது எம்.எஸ்.வி-யிடம் பணிபுரிந்த பல முன்னணி நடிகர்களும் இயக்குநர்களும் இளையராஜா பக்கம் திரும்பினார்கள். அதேபோல ஏ.ஆர்.ரகுமான் புது வகையான ஒலியுடன் ஒரு புரட்சி செய்தபோது, அது போன்ற ஒரு வரலாறு மீண்டும் நடந்தது. தற்சமயம் பல திறமையான இசையமைப்பாளர்கள் இருப்பதால் பல முன்னணி நடிகர்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கிறார்கள். குறிப்பாக அனிருத்துடன் நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் தொடர்ச்சியாக படங்கள் செய்வது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் இளையராஜா

எம்.ஜி.ஆர் இளையராஜா

அப்படி எம்.ஜி.ஆரும் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பணியாற்ற விரும்பினாராம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க முடிவு செய்து அவருடன் நெருங்கி பழகிய கவிஞர் வாலியை அழைத்து கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதச் சொன்னாராம். அப்படியே அன்னக்கிளி என்ற படத்திற்கு ஒரு இசையமைப்பாளர் புதிதாக வந்துள்ளாரே அவரையே ஒப்பந்தம் செய்து விடுங்கள் என்று கூறினாராம். அதன் அடிப்படையில் வாலியும் ஏற்பாடு செய்ய, அன்றே பத்திரிகைகளில் அது தலைப்புச் செய்தியாக வந்ததாம்.

என்ன ஆனது..?

என்ன ஆனது..?

அந்தச் செய்தி வந்தபோது, எம்.எஸ்.விஸ்வநாதன் நான்தான் இளையராஜாவை ஒப்பந்தம் செய்தேன் என்று நினைத்து என்னிடம் கோபித்துக் கொண்டார் என வாலி கூறியிருக்கிறார். பின்னர், எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்து கொண்டு எப்படி படத்தில் நடிக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்ததால் அந்தப் படம் கைவிடப்பட்டது என வாலி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஒருவேளை அது நடந்திருந்தால் எம்.ஜி.ஆர் படத்திற்கு இசையமைத்த பெருமை இளையராஜா அவர்களுக்கு கிடைத்திருக்கும். அதேபோல எம்.ஜி.ஆர் அவர்களும் இளையராஜாவின் அப்போது இருந்த புதுமையான இசையில் பார்த்திருக்கக் கூடும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X