twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜாவுக்கு இதெல்லாம் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!

    இளையராஜாவின் பின்னணி இசையில் ஜொலித்த தமிழ்ப் படங்கள்.

    |

    Recommended Video

    காயங்களும் ஆறாதோ ! நீ இசை மீட்டினால்

    சென்னை: ஒரு திரைப்படத்தின் உயிர் நாடியாக விளங்கும் பின்னணி இசையை கோர்ப்பதில் இளைராஜாவுக்கு நிகர் இளையராஜாதான்.

    திரைப்படங்களில் பின்னணி இசைக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. ஒலியில்லாமல் சாதாரணமாக ஒரு காட்சியை பார்ப்பதற்கும், பின்னணி இசையுடன் பார்ப்பதற்குமான வித்தியாசம் ஏராளம்.

    திரில்லர் காட்சியானாலும், ஆக்ஷன் காட்சியானாலும், ரொமான்ஸ் காட்சியானாலும் மற்ற எந்த காட்சியானாலும், அந்த சூழலை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் பின்னணி இசைக்கு முக்கியபங்குண்டு.

    இதில் தனித்துவமாக விளங்குபவர் இளையராஜா. இதோ அவரது பின்னணியில் இசைக்கு புகழ்பெற்ற படங்களின் தொகுப்பு...

    புதிய முயற்சி:

    புதிய முயற்சி:

    ஏற்கனவே வேறு ஒரு இசையமைப்பாளர் இசையமைத்து, பாடல் எழுதிய இப்படத்திற்கு பின்னர் கமலின் வேண்டுகோளை ஏற்று இசையமைத்தார் இளையராஜா. ஏற்கனவே படமாக்கப்பட்ட காட்சிகளில் இருந்த உதட்டசைவுக்கு ஏற்ப இசையமைத்து பெரும் பாராட்டுகளைப் பெற்றார்.

    12 மணி நேரத்தில்:

    12 மணி நேரத்தில்:

    இப்படத்தின் ரீரெக்கார்ட்டிங்கை வெறும் 12 மணி நேரத்தில் முடித்துக் கொடுத்தார் இளையராஜா. ஆனால் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவர் ரீரெக்கார்ட்டிங் பார்ப்பவர்களின் பல்சை கூட்டிக் குறைக்கும்.

    மூன்றே நாளில்:

    மூன்றே நாளில்:

    சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரெக்கார்டினை வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களைக் கொண்டு மூன்றே நாளில் முடித்தார் இளையராஜா. செலவும் வெறும் பத்தாயிரம் ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேசட்டாக வெளியானது:

    கேசட்டாக வெளியானது:

    இந்தியாவிலேயே பின்னணி இசை மட்டும் கேசட்டாக வெளியிடப்பட்டது இப்படத்திற்கு தான். அது மிகப்பெரிய ஹிட்டானது வேறுகதை.

    விருது:

    விருது:

    இந்தியாவிலேயே முதன்முறையாக சிறந்த பின்னணி இசைக்காக விருது பெற்றவர் இளையராஜா தான். பழசிராஜா படத்திற்காக இந்த விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

    அதிக நாட்கள்:

    அதிக நாட்கள்:

    இளையராஜா அதிகபட்சமாக 28 நாட்கள் இசைகோர்ப்புக்கு எடுத்துக் கொண்ட படம் மலையாளத்தில் காலாபாணி, தமிழில் சிறைச்சாலை ஆகும். மற்ற படங்களுக்கு எல்லாம் இதை விடக் குறைவான நாட்களிலேயே அவை இசை கோர்ப்பு செய்தார்.

    ஒரு சோறு பதம்:

    ஒரு சோறு பதம்:

    இவை தவிர, அஞ்சலி, மௌனராகம், நாயகன், தளபதி, சிவப்பு ரோஜாக்கள், சிந்து பைரவி என இளையராஜாவின் பின்னணி இசை பேசப்பட்ட படங்கள் ஏராளம். மேலே கூறியவை எல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தான்.

    English summary
    The music legend Ilayaraja is a expert in background score. His background scores are very unique as no one can be compared with him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X