புதுமாப்பிள்ளைக்கு பாடல் உருவான விதம் .. மனம் திறந்தார் இளையராஜா !

சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் புது மாப்பிள்ளைக்கு பாடல் உருவான விதம் பற்றி இசைஞானி இளையராஜா சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் தயாரித்தும் நடித்தும் இருந்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் திரையில் கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை புரிந்த தோடு பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் அதில் வரும் "புது மாப்பிள்ளைக்கு" பாடல் உருவான சுவாரசியமான தகவல் பற்றி இளையராஜா மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம் உரையாடிய வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒப்பற்ற கலைஞராக

ஒப்பற்ற கலைஞராக

இந்திய சினிமாவில் ஆகச் சிறந்த நடிகராக விளங்கும் நடிகர் கமல்ஹாசன் நடிக்கத் தொடங்கியது முதல் இன்று வரை பல்வேறு விதமான வேடங்களில் ஏற்று நடித்தும், அதேசமயம் சில படங்களை இயக்கியும், தயாரித்தும் இந்திய திரைத்துறையில் ஒப்பற்ற கலைஞராக திகழ்ந்து வருகிறார்.

அதிகமான முக்கியத்துவம் கொடுத்து

அதிகமான முக்கியத்துவம் கொடுத்து

அவ்வாறு இவர் நடித்த பல படங்கள் இன்றும் நூலகமாக வளர்ந்து வரும் திரைக்கலைஞர்களுக்கு இருந்து வருகின்ற நிலையில், இவர் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் வெற்றி இன்றளவும் பலரையும் வியக்க வைத்து வருகிறது. கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தின் பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா வழக்கத்தைவிட அதிகமான முக்கியத்துவம் கொடுத்து அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடலாக கொடுத்திருந்தார்.

புதுமாப்பிள்ளைக்கு பாடல்

புதுமாப்பிள்ளைக்கு பாடல்

இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் அதில் அப்பு கதாபாத்திரத்திற்கு உருவாக்கப்பட்ட "புதுமாப்பிள்ளைக்கு" பாடல் உருவான விதம் பற்றி சுவாரசியமான தகவலை இசைஞானி இளையராஜா பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மெலோடியிலேயே கொஞ்சம் துள்ளல்

மெலோடியிலேயே கொஞ்சம் துள்ளல்

அந்த வீடியோவில் இசைஞானி கூறியதாவது... கமல்ஹாசன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அப்பு கதாபாத்திரத்திற்கு பாடல் வேண்டும் என்று கேட்க அதற்கு இசைஞானி தனது பாணியில் ஒரு அற்புதமான மெலோடி இசையை இசைத்து காண்பித்துள்ளார். அதைக்கேட்ட கமல்ஹாசன் இது நன்றாக இருக்கிறது ஆனால் எனக்கு மெலோடியிலேயே கொஞ்சம் துள்ளல் கலந்த மாதிரி பாடல் வேண்டும் என்று கேட்க, அதற்கு இசைஞானி எந்த மாதிரி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

நான் பார்த்ததிலே

நான் பார்த்ததிலே

கமல்ஹாசன் உடனேயே எம்ஜிஆரின் புகழ்பெற்ற பாடலான "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்" என்ற பாடலை மேற்கோள் காட்டி, இதுபோன்ற ஒரு பாடல் வேண்டும் என கேட்க, இசைஞானி இளையராஜா அதே டோனில்.. ரப்பப்பா ரப்பப்பரே என கமல் கேட்டவாறு ஒரு இசையை இசையமைத்து காட்டினார்.

நீங்கள் கேட்டதை தான்

நீங்கள் கேட்டதை தான்

அதைக்கேட்ட கமல்ஹாசன் உடனடியாகவே பிரமாதமாக இருக்கிறது இந்த டியூன் ஓகே என சொன்ன கையோடு, இந்த டியூனை போட எப்படி ஐடியா கிடைத்தது என இளையராஜாவை பார்த்து கேட்க, அதற்கு இசைஞானி சிரித்துக்கொண்டே நீங்கள் கேட்டதை தான் நான் திருப்பிக் கொடுத்துள்ளேன் என கூறியவாறு "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்" பாடலை "புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரே நல்ல யோகமடா ரப்பப்பரே" என திருப்பி கொடுத்துள்ளேன் என கமலிடம் கூறி அதிர வைத்துள்ளார்.

சுவாரசியமான தகவல்

சுவாரசியமான தகவல்

இவ்வாறு புதுமாப்பிள்ளைக்கு பாடல் உருவான விதம் பற்றிய இதுவரை யாரும் அறியாத சுவாரசியமான தகவல் ஒன்றை இசைஞானி இளையராஜா எஸ் பி பாலசுப்ரமணியத்திடம் பகிர்ந்துகொண்ட அந்த உரையாடல் அடங்கிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X