»   »  இசைஞானியின் இலக்கிய விருது

இசைஞானியின் இலக்கிய விருது

Subscribe to Oneindia Tamil

இசையமைப்பாளர் இளையராஜா, தனது பெயரில் இசைஞானி இலக்கிய பெருமன்றம் என்ற அமைப்பைஉருவாக்கியுள்ளார்.

இந்த அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் பாவலர் வரதராஜன் இலக்கிய விருது வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இளையராஜா கூறுகையில், எனது பெயரில் இசைஞானி இலக்கிய பெருமன்றம்என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக எழுத்தாளர் ஜெயகாந்தன் செயல்படுவார்.

கமிட்டி உறுப்பினர்களாக கவிஞர்கள் வாலி, மு.மேத்தா, ரவிசுப்ரமணியம், பேராசிரியர்கள் அப்துல் ரகுமான்,கு.ஞானசம்பந்தன், திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் இருப்பார்கள்.

இந்த மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்து விளஙகும் சாதனையாளர்களுக்கும், சிறந்த படைப்பாளிகளுக்கும்எனது சகோதரர் பாவலர் வரதராஜன் பெயரில் விருதும், பதக்கம் வழங்கப்படும்.

இந்த அமைப்பின் முதல் நிகழ்ச்சி டிசம்பர் 2ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் என்றார்இளையராஜா.

இதே நிகழ்ச்சியின்போது இசைஞானி இளையராஜாவின் இசையில் 36 பாடல்கள் இடம்பெறும் அஜந்தாதிரைப்படத்தின் பாடல் கேசட்டும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil