நூறாண்டு இந்திய சினிமா: சிறந்த படம் நாயகன்..சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா- சிறந்த நடிகர் என்.டி.ஆர்.

By Shankar

டெல்லி: இந்திய சினிமாவின் நூறாண்டு சரித்திரத்தில் சிறந்த படமாக கமல் நடித்த நாயகன், சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா என சமீபத்தில் நடந்த ஐபிஎன் லைவ் கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.

சிறந்த நடிகையாக ஸ்ரீதேவியும், சிறந்த நடிகராக என்டி ராமாராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த நடிகர் கருத்துக் கணிப்பில் கமலுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவின் இணையற்ற கலைஞர்கள் குறித்த நாடு தழுவிய கருத்துக் கணிப்பை நடத்தியது ஐபிஎன் லைவ் தொலைக்காட்சி.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

நடிகர்களில் அதிக வாக்குகள் கிடைத்தது தெலுங்கு சினிமாவின் என்டி ராமாராவுக்குத்தான். 53 சதவீத வாக்குகளை அவர் பெற்றார். கமல் ஹாஸனுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தன. சூப்பர் ஸ்டார் ரஜினி, சாதனை நடிகர் அமிதாப், ஷாரூக்கான் போன்றவர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

சிறந்த நடிகைக்கான வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் வாங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. மாதுரி தீக்ஷித் 16 சதவீத வாக்குகளும், சாவித்திரி 12 சதவீத வாக்குகளும் பெற்றார்.

சிறந்த படம்

சிறந்த படம்

100 ஆண்டு சினிமாவில் கமல் நடித்த நாயகன்தான் சிறந்த படம் என 42 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ஷோலே-வுக்கு 29 சதவீத வாக்குகள் கிடைத்தன.

சிறந்த இயக்குநர்

சிறந்த இயக்குநர்

சிறந்த இயக்குநருக்கான வாக்கெடுப்பில் மணிரத்னம் 29 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அடுத்த இடம் கே பாலச்சந்தருக்கு. 18 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். சத்யஜித்ரே-க்கு 14 சதவீத வாக்குகளும், ஷங்கருக்கு 9 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா

சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா

இந்திய சினிமாவில் கடந்த 100 ஆண்டுகளில் மிகச் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா என இந்த கருத்துக் கணிப்பில் 44 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ஏஆர் ரஹ்மானுக்கு 29 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

தென்மாநில நட்சத்திரங்கள் ஆதிக்கம்

தென்மாநில நட்சத்திரங்கள் ஆதிக்கம்

இந்தக் கருத்துக் கணிப்பில் மிக முக்கியமானது, தேர்வு பெற்ற அனைவருமே தென் மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களே. என்டிஆர், இளையராஜா, ஸ்ரீதேவி, மணிரத்னம் மற்றும் சிறந்த படமான நாயகன் என அனைத்தும் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X