»   »  ரெக்கார்ட் ராஜா!

ரெக்கார்ட் ராஜா!

Subscribe to Oneindia Tamil

ஏகப்பட்ட சாதனைகளை தனது ஜிப்பா பாக்கெட்டில் நிரப்பி வைத்துள்ள இசைஞானி இளையராஜா, இப்போதுஇன்னொரு ரெக்கார்டையும் படைத்துள்ளார்.

எல்லோரா மூவி கிளப் என்ற பட நிறுவனம் அஜந்தா என்ற பெயரில் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறது.இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு திராவிட மொழிகளிலும் ஒரே நேரத்தில்தயாராகிறது.

இப்படத்துக்கு ரமணாதான் ஹீரோ என்றாலும் கூட ஒரிஜினல் ஹீரோ இசைஞானி தான். இப்படம்பாடல்களாலும், இசையாலும் பேசப்பட வேண்டும் என்று ராஜாவிடம், தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கரும்,இயக்குனர் திருமாவளவனும் சொல்லப் போக, செஞ்சுட்டாப் போச்சு என்று ராஜா தனது வழக்கமானபுன்சிரிப்புடன் அதை ஏற்றார்.

சிரிப்போடு நின்று விடாமல், சீரும், சிறப்புமாக பாடல்களை கொடுத்து அசத்தி விட்டாராம். அதுவும் எத்தனைபாடல்கள் தெரியுமா? 36 பாடல்கள். சமீபகாலத்தில் இதுவரை உலகத்தில் எங்குமே ஒரே படத்திற்கு இத்தனைபாடல்கள் போடப்படவில்லையாம்.

ஒவ்வொரு பாட்டும் முத்து முத்தாக வந்திருக்கிறதாம். ராஜா கொடுத்த பாடல்களைக் கேட்ட இயக்குனர்திருமாவளவன் அத்தனை பாடல்களையும் பயன்படுத்திக் கொள்ளப் போகிறாராம். இதேபோல பின்னணிஇசையிலும் பின்னி எடுத்துள்ளாராம் ராஜா.

நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் தமிழில் ரமணா-வந்தனா குப்தா என்ற கவர்ச்சி கனிமொழிஜோடியாக நடித்துள்ளனர். கன்னடப் பதிப்பில் வெங்கடேஷ் என்பவரும், ஹனிரோஸ் என்ற ரோஜா இதழும்ஜோடி போட்டுள்ளனர். இந்த வெங்கடஷ்ே, ஒரு படப்பிடிப்பு நிறுவனத்தில் ஆபிஸ் பையனாக இருந்தவராம்.

தெலுங்குப் பதிப்பில் சாய்கிரண், வந்தனா குப்தா நடித்துள்ளது. மலையாளத்தில் வினுமோகன், ஹனிரோஸ்இணை சேர்ந்துள்ளனர்.

வந்தனா குப்தாவில் கவர்ச்சியில் பட்டையைக் கிளப்பியுள்ளாராம். இதேபோல ஹனிரோஸும் தன் பங்குக்குஉசுப்பேத்தியுள்ளாராம்.

அஜந்தா ஓவியங்களுக்கு பிரபலம், ஆனால் இந்தப் படமோ ராகதேவனின் இசைக் காவியத்திற்கு பிரபலமாகப்போகிறது.

ராசா ராசாதான்யா!

Read more about: ilayarajas new record
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil