»   »  பெரியார் சர்ச்சையில் இசைஞானி

பெரியார் சர்ச்சையில் இசைஞானி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரியார் படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜா மறுத்து விட்டார் என்றுஒரு சர்ச்சை கோலிவுட்டில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி ஞானராஜசேகரனின் இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பு, ஜோதிர்மயிநடிப்பில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படம் உருவாகிறது. இந்தப் படத்திற்குதமிழக அரசு ரூ. 95 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது (இதுவே முதலில் பெரியசர்ச்சை ஆனது)

ஞான ராஜசேகரனைத் தெரியாத சீரியஸ் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது.அவரது முதல் படமான மோகமுள், தொடர்ந்து வந்த பாரதி ஆகிய படங்களுக்குஉயிர் கொடுத்தவர் இளையராஜா. குறிப்பாக பாரதி படத்தின் உயிர் நாடியாகராஜாவின் இசை அமைந்திருந்தது. மோகமுள் படத்தின் கனமான கதையை தனதுஇசைத் தோளில் படு லாவகமாக சுமந்து ரசிகர்கள் மனதில் இறக்கி வைத்தது ராஜாவின்இசை.

இந் நிலையில் ஞானசேகரனின் பெரியார் படத்திற்கும் ராஜாதான் இசையமைப்பார்என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அப்படத்திற்கு வித்யாசாகர்இசையமைத்துக் கொண்டுள்ளார்.

இந் நிலையில்தான் நாத்திகத்தை பிரதானப்படுத்தி பெரியார் படம் எடுக்கப்படுவதால்அதற்கு இசையமைக்க இளையராஜா மறுத்து விட்டார் என தகவல் வெளியானது.

ஆனால் இந்த செய்தியை இளையராஜா மறுக்காமல் அமைதி காத்தார். இதனால்திராவிட இயக்கத்தினர் மத்தியில் இளையராஜா குறித்து அதிருப்தி பரவியுள்ளது.சர்ச்சை பெரிதானதையடுத்து இளையராஜா மெல்ல வாய் திறந்துள்ளார்.

பெரியார் படத்திற்காக தன்னை யாரும் முறையாக அணுகவில்லை, இசையமைக்ககேட்கவில்லை. எனவேதான் நான் இசையக்கவில்லை என்று இளையராஜாகூறியுள்ளார்.

மேலும், ராஜசேகரனையும் ராஜா கடுமையாக சாடியுள்ளார். அவர் ஒரு அதிகாரி தான்.உள்ளத் தூய்மை கொண்ட கலைஞன் அல்ல. அவர் ஒரு வியாபாரி என்று போட்டுதாக்கியுள்ளார் இளையராஜா.

எத்தனையோ குப்பைப் படங்களுக்குக் கூட ராஜா இசையமைத்துள்ளார். அப்படிஇருக்கையில் பெரியார் போன்ற மிகப் பெரிய சீர்திருத்தவாதியின் வாழ்க்கை வரலாறுபடத்துக்கு இசையமைக்க மறுப்பாரா என்றும் இளையராஜா தரப்பு கேட்கிறது.

ஆனால், ஞானராஜசேகரன் வேறு மாதிரியாக கூறுகிறார். நான் பெரியார் படஸ்கிரிப்ட்டை ராஜாவிடம் காட்டினேன். பாரதி படத்திற்காக ராஜாவை எப்படிஅணுகினேனோ அதேபோலத்தான் பெரியார் படத்துக்கும் அவரை அணுகினேன்.

ஆனால், என் ஆன்மீகக் கொள்கைகளுக்கு முரணானது பெரியாரின் நாத்திகவாதம்.எனவே என்னால் இசையமைக்க முடியாது என்று கூறி விட்டார் ராஜா. இதுதான்உண்மை என்கிறார்.

பெரியார் படத்தில் ராஜா இடம்பெறாததற்கு இன்னொரு காரணம்கிசுகிசுக்கப்படுகிறது. இப்படத்திற்கு பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.ராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே நட்பு காலியாகி பல காலமாகிறது.

வைரமுத்து பெரியாரில் இருப்பதால் ராஜா தயங்கியிருக்கலாம். ஆனால் வைரமுத்துமுதல்வர் கருணாநிதியின் சாய்ஸ் என்று கூறப்படுகிறது. எனவே அவரை நீக்கமுடியாது. இப்படி பல சிக்கல்கள் சேர்ந்து கொண்டதால் கூட ராஜா இப்படத்தைத்தவிர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் யாருக்கு நஷ்டம் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil