twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா ஒரு இமயம் - பி.சுசீலா புகழாரம் இசையமைப்பாளர் இளையராஜா இமயமலை அளவுக்கு உயர்ந்து விட்டார். அவரைப்புகழ வார்த்தைகளே இல்லை என்று பழம் பெரும் பின்னணிப் பாடகி பி.சுசீலாபுகழாரம் சூட்டியுள்ளார். 12,000க்கும் அதிகமான பாடல்களை பல்வேறு இந்திய மொழிகளில் பாடியுள்ளபி.சுசீலா, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மனம்விட்டுப் பல்வேறு விஷயங்களைப் பேசினார். அவரது பேட்டியிலிருந்து சில துளிகள்: அந்தக் கால பாடல்களில் ஈர்ப்பு இருந்தது.இப்போது அது இல்லை என்கிறார்கள். அந்தக் காலங்களில், படம் வந்தால் தான்அதில் இடம் பெற்றுள்ள பாடல்கள் குறித்துத் தெரிய வரும். அதனால் பாடல்கள் ஈர்ப்புடன் இருக்கும். ஹிட் ஆகும். ஆனால் இப்போது படம்வருவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பாடல்கள் வந்து விடுவது அதன்எதிர்பார்ப்பைக் குறைத்து விடுகிறது. ஒருவருக்கு வயதாகி விட்டால் அவர் பாடக்கூடாது. எனக்கு வயதாகி விட்டது.அதனால் பாடுவதை குறைத்து விட்டேன். எனது குரல் அப்படியே இருக்கிறது என்றுகூறுகிறார்கள். சமீபத்தில் கூட பாடுவதற்கு வாய்ப்பு வந்தது. நான் மறுத்து விட்டேன். தற்போது வரும் பாடல்களில் சில நன்றாக உள்ளன. சிலவற்றை கேட்கவேமுடியவில்லை. ஆபாசமான வார்த்தைகளுடனும் பாடல்கள் வருகின்றன. ஆனால்இவற்றை யாருமே விரும்பி பாட மாட்டார்கள். கட்டாயத்தின் காரணமாகவேபாடுவார்கள். என்னை லதா மங்கேஷ்கரின் தங்கை என்றுதான் முன்பு அழைப்பார்கள். வடக்கேஎப்படி லதாவோ தெற்கே சுசீலா என்றும் கூறுவார்கள். ஆனால் நான் பாட வந்தபோதுஎனக்குத் தமிழ் தெரியாது. எம்.எஸ்.வி.தான் எனக்கு பாட வாய்ப்பு கொடுத்தார். என் குரல் இனிமையாக இருந்ததால் ஜெமினி, ஏவிஎம் என எல்லாக் கம்பெனிகளும்எனது குரலைப் பயன்படுத்திக் கொண்டன. ஏவிஎம் நிறுவனம் தான் எனக்கு ஒருஆசிரியரை வைத்து தமிழ் கற்றுக் கொடுத்தது. நான் பாடிய நாயகிகள் அனைவருமே நல்ல அழகிகள். சாவித்ரி, சரோஜா தேவி,ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, விஜயக்குமாரி, தேவிகா, செளகார் ஜானகி, மஞ்சுளா,காஞ்சனா, லட்சுமி என அந்த அழகிகள் பட்டியல் பெரிதாக நீளும். பானுமதியும், வரலட்சுமியும் நடிப்பில் மட்டுமல்ல நன்றாக பாடவும் செய்வார்கள்.அவர்களது குரல் வளம், பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்போது சுஜாதா, சொர்ணலதா ஆகியோரின் குரல்கள் எனக்குப் பிடிக்கும்.எப்போதுமே மெலடி தான் மனசில் நிற்கும், நீண்ட நாள் கேட்கப்படும். அது அந்தக்காலமாக இருந்தாலும் சரி, இந்தக் காலமாக இருந்தாலும் சரி. மெலடிக்குத் தான் முதல்மரியாதை கிடைக்கும். ஜேசுதாஸ் மெலடியில் நன்றாகப் பாடுவார். அதேபோல எஸ்.பி.பாலசுப்ரமணியமும்நன்றாகப் பாடுவார். என்னை அறிமுகப்படுத்திய எம்.எஸ்.வி. தவிர இன்னொரு இசையமைப்பாளரைநான் கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். அவர் தான் இசைஞானி இளையராஜா.அவரைப் புகழ்ந்து சொல்ல வார்த்தையே இல்லை. அவர் ஒரு இமயமலை. அந்த அளவுக்கு உயர்ந்து விட்டார். அவரது இசையில் நான்பாடிய பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். மிகச் சிறந்த இசை ஞானி அவர், நான்ஒரு சாதாரண பாடகி என்று முடித்தார் சுசீலா. சுசீலாவின் குரலில் அவரது பாடல்கள் மட்டும் இடம் பெறும் இசை நிகழ்ச்சி சென்னைராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வருகிற 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)மாலை நடைபெறுகிறது.இதில் சுசீலா கலந்து கொண்டு பாடவுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன்,டி..கே.ராமமூர்த்தி, டி.எம்.செளந்தரராஜன் ஆகியோரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

    By Staff
    |

    இசையமைப்பாளர் இளையராஜா இமயமலை அளவுக்கு உயர்ந்து விட்டார். அவரைப்புகழ வார்த்தைகளே இல்லை என்று பழம் பெரும் பின்னணிப் பாடகி பி.சுசீலாபுகழாரம் சூட்டியுள்ளார்.

    12,000க்கும் அதிகமான பாடல்களை பல்வேறு இந்திய மொழிகளில் பாடியுள்ளபி.சுசீலா, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மனம்விட்டுப் பல்வேறு விஷயங்களைப் பேசினார்.

    அவரது பேட்டியிலிருந்து சில துளிகள்: அந்தக் கால பாடல்களில் ஈர்ப்பு இருந்தது.இப்போது அது இல்லை என்கிறார்கள். அந்தக் காலங்களில், படம் வந்தால் தான்அதில் இடம் பெற்றுள்ள பாடல்கள் குறித்துத் தெரிய வரும்.

    அதனால் பாடல்கள் ஈர்ப்புடன் இருக்கும். ஹிட் ஆகும். ஆனால் இப்போது படம்வருவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பாடல்கள் வந்து விடுவது அதன்எதிர்பார்ப்பைக் குறைத்து விடுகிறது.

    ஒருவருக்கு வயதாகி விட்டால் அவர் பாடக்கூடாது. எனக்கு வயதாகி விட்டது.அதனால் பாடுவதை குறைத்து விட்டேன். எனது குரல் அப்படியே இருக்கிறது என்றுகூறுகிறார்கள். சமீபத்தில் கூட பாடுவதற்கு வாய்ப்பு வந்தது. நான் மறுத்து விட்டேன்.

    தற்போது வரும் பாடல்களில் சில நன்றாக உள்ளன. சிலவற்றை கேட்கவேமுடியவில்லை. ஆபாசமான வார்த்தைகளுடனும் பாடல்கள் வருகின்றன. ஆனால்இவற்றை யாருமே விரும்பி பாட மாட்டார்கள். கட்டாயத்தின் காரணமாகவேபாடுவார்கள்.

    என்னை லதா மங்கேஷ்கரின் தங்கை என்றுதான் முன்பு அழைப்பார்கள். வடக்கேஎப்படி லதாவோ தெற்கே சுசீலா என்றும் கூறுவார்கள். ஆனால் நான் பாட வந்தபோதுஎனக்குத் தமிழ் தெரியாது. எம்.எஸ்.வி.தான் எனக்கு பாட வாய்ப்பு கொடுத்தார்.

    என் குரல் இனிமையாக இருந்ததால் ஜெமினி, ஏவிஎம் என எல்லாக் கம்பெனிகளும்எனது குரலைப் பயன்படுத்திக் கொண்டன. ஏவிஎம் நிறுவனம் தான் எனக்கு ஒருஆசிரியரை வைத்து தமிழ் கற்றுக் கொடுத்தது.

    நான் பாடிய நாயகிகள் அனைவருமே நல்ல அழகிகள். சாவித்ரி, சரோஜா தேவி,ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, விஜயக்குமாரி, தேவிகா, செளகார் ஜானகி, மஞ்சுளா,காஞ்சனா, லட்சுமி என அந்த அழகிகள் பட்டியல் பெரிதாக நீளும்.

    பானுமதியும், வரலட்சுமியும் நடிப்பில் மட்டுமல்ல நன்றாக பாடவும் செய்வார்கள்.அவர்களது குரல் வளம், பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    இப்போது சுஜாதா, சொர்ணலதா ஆகியோரின் குரல்கள் எனக்குப் பிடிக்கும்.எப்போதுமே மெலடி தான் மனசில் நிற்கும், நீண்ட நாள் கேட்கப்படும். அது அந்தக்காலமாக இருந்தாலும் சரி, இந்தக் காலமாக இருந்தாலும் சரி. மெலடிக்குத் தான் முதல்மரியாதை கிடைக்கும்.

    ஜேசுதாஸ் மெலடியில் நன்றாகப் பாடுவார். அதேபோல எஸ்.பி.பாலசுப்ரமணியமும்நன்றாகப் பாடுவார்.

    என்னை அறிமுகப்படுத்திய எம்.எஸ்.வி. தவிர இன்னொரு இசையமைப்பாளரைநான் கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். அவர் தான் இசைஞானி இளையராஜா.அவரைப் புகழ்ந்து சொல்ல வார்த்தையே இல்லை.

    அவர் ஒரு இமயமலை. அந்த அளவுக்கு உயர்ந்து விட்டார். அவரது இசையில் நான்பாடிய பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். மிகச் சிறந்த இசை ஞானி அவர், நான்ஒரு சாதாரண பாடகி என்று முடித்தார் சுசீலா.

    சுசீலாவின் குரலில் அவரது பாடல்கள் மட்டும் இடம் பெறும் இசை நிகழ்ச்சி சென்னைராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வருகிற 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)மாலை நடைபெறுகிறது.

    இதில் சுசீலா கலந்து கொண்டு பாடவுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன்,டி..கே.ராமமூர்த்தி, டி.எம்.செளந்தரராஜன் ஆகியோரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X