இளையராஜாவும், சத்யன் அந்திக்காடும்

சத்யன் அந்திக்காடும், இளையராஜாவும் இணைந்த முந்தைய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனவை. முதல் படமான கொச்சு கொச்சு சந்தோஷங்கள் முதல் கடைசியாக வெளியான விநோதயாத்ரா வரை அனைத்துப் படங்களுமே சூப்பர் ஹிட் ஆனவை.
இந்த நிலையில் இருவரும் அடுத்த படம் ஒன்றில் இணையவுள்ளனர். இப்படம் ஜனவரி 3வது வாரம் தொடங்கவுள்ளது.
இப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மினும், மோகன்லாலின் பேவரைட் நாயகியான மீனாவும் நடிக்கவுள்ளனர்.
மீனாவும், மோகன்லாலும் இணைந்த முந்தைய படங்கள் சூப்பர் ஹிட் ஆனவை. எனவே இந்தப் படமும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
Comments


Click it and Unblock the Notifications