twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பவதாரணிக்கு இளையராஜாவின் ஸ்பெஷல் பரிசு! மகள் பவதாரணிக்காக இசைஞானி இளையராஜா, ஒரு பாடலுக்கு இசையமைத்து அதை மகளுக்கு அர்ப்பணித்தார்.இசைஞானி இளையராஜாவின் மகள் பவதராணியின் திருமணம் கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வெள்ளிக்கிழமைநடக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் திருமணத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.இளையராஜாவின் மகள் பவதாரணிக்கும், மதுரையைச் சேர்ந்த சபரிராஜனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம்கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடக்கிறது. கோவிலுக்கு சொந்தமான மூகாம்பிகை சபா பவனாவில் வெள்ளிக்கிழமை காலை7 மணி முதல் 8 மணிக்குள் திருமணம் நடைபெறவுள்ளது.திருமணத்தையொட்டி கணேஷ்-குமரேஷ் சகோதரர்களின் வயலின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமைகாலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் மணப்பெண்ணுக்கு மருதாணி இடும் நிகழ்ச்சியும், மாப்பிள்ளை அழைப்பும் நடைபெறுகிறது.காலையில் சாதகப் பறவைகள் குழுவினரின் இசை நிகழ்ச்சி, மாலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். திருமண வரவேற்பு 19ம் தேதி சென்னை சாந்தோம் மேயர் ராமநாதன் செட்டியார்மண்டபத்தில் நடைபெறுகிறது. திருமணத்தையொட்டி பவதாரணியும், சபரிராஜனும் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.அப்போது இருவரும் சேர்ந்து கேக் வெட்டினர். பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு திருமண அழைப்பிதழை இருவரும் சேர்ந்து வழங்கினர்.நிகழ்ச்சியில் இளையராஜா, அவரது மனைவி ஜீவா, மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்சங்கத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து பவதாரணி திருமணத்தையொட்டி இளையராஜாவின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பாடல் ஒலிபரப்பப்பட்டது.தனது மகளுக்கு இந்தப் பாடலை சமர்ப்பிப்பதாக இளையராஜா அப்போது கூறினார்.

    By Staff
    |

    மகள் பவதாரணிக்காக இசைஞானி இளையராஜா, ஒரு பாடலுக்கு இசையமைத்து அதை மகளுக்கு அர்ப்பணித்தார்.

    இசைஞானி இளையராஜாவின் மகள் பவதராணியின் திருமணம் கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வெள்ளிக்கிழமைநடக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் திருமணத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

    இளையராஜாவின் மகள் பவதாரணிக்கும், மதுரையைச் சேர்ந்த சபரிராஜனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம்கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடக்கிறது. கோவிலுக்கு சொந்தமான மூகாம்பிகை சபா பவனாவில் வெள்ளிக்கிழமை காலை7 மணி முதல் 8 மணிக்குள் திருமணம் நடைபெறவுள்ளது.

    திருமணத்தையொட்டி கணேஷ்-குமரேஷ் சகோதரர்களின் வயலின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமைகாலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் மணப்பெண்ணுக்கு மருதாணி இடும் நிகழ்ச்சியும், மாப்பிள்ளை அழைப்பும் நடைபெறுகிறது.காலையில் சாதகப் பறவைகள் குழுவினரின் இசை நிகழ்ச்சி, மாலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.


    திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். திருமண வரவேற்பு 19ம் தேதி சென்னை சாந்தோம் மேயர் ராமநாதன் செட்டியார்மண்டபத்தில் நடைபெறுகிறது. திருமணத்தையொட்டி பவதாரணியும், சபரிராஜனும் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.அப்போது இருவரும் சேர்ந்து கேக் வெட்டினர். பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு திருமண அழைப்பிதழை இருவரும் சேர்ந்து வழங்கினர்.

    நிகழ்ச்சியில் இளையராஜா, அவரது மனைவி ஜீவா, மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்சங்கத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து பவதாரணி திருமணத்தையொட்டி இளையராஜாவின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பாடல் ஒலிபரப்பப்பட்டது.தனது மகளுக்கு இந்தப் பாடலை சமர்ப்பிப்பதாக இளையராஜா அப்போது கூறினார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X