»   »  காதலிக்க இலியானா ரெடி!

காதலிக்க இலியானா ரெடி!

Subscribe to Oneindia Tamil

டோலிவுட்டின் சூப்பர் டூப்பர் நாயகி இலியான நடிப்பில் மட்டுமல்ல பேச்சிலும் படு தில்லாலங்கடியாகஇருக்கிறார்.

தி>ஷாவைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு டான்ஸிலும், கிளாமரிலும் பின்னி எடுத்து மணவாடுகளின் ஏகோபித்தஆதரவைப் பெற்றுள்ள இலியானா, படு வேகமாக உச்சத்தை நோக்கி ஓடோடிக் கொண்டிருக்கிறார்.

குவிந்த உதடுகள், இஞ்சிக்குப் போட்டியான இடுப்பு, நச்சென்ற டான்ஸ் என பின்னி எடுத்துக் கொண்டிருக்கும்இலியானா போக்கிரி, தேவதாஸ் என இரு படங்களை மட்டுமே கொடுத்துள்ளார்.

இப்போது இலியானா முன்னா, ராக்கி, ஆத்தா (அச்ணாச்) என மூன்று படங்களில் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் கேடி படத்தில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்ட இலியானா தொடர்ந்து தமிழைதட்டிக் கழித்து வருகிறார்.

ஏன் தொடர்ந்து தமிழ் ரசிகர்களை இப்படி தத்தளிக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இலி, எப்பதான் முழு வீச்சில்கோலிவுட்டில் குதிப்பீர்கள் என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. தெலுங்கில் நான் படு பிசியாகஇருக்கிறேன்.

தூங்கவோ, சாப்பிடவோக் கூட எனக்கு நேரம் இல்லை. அந்த அளவுக்கு பிசியாக உள்ளேன். அப்படிஇருக்கையில் தமிழுக்கோ, பிற மொழிகளுக்கோ நேரம் ஒதுக்க என்னால் முடியவில்லை.

இப்போது தமிழுக்கு வர முடியாவிட்டாலும், வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வந்து சேருவேன் என்றும் பன்ச்வைக்கிறார் இலி.

கோவாவுக்கு இலியானாவால் பெருமை. காரணம் இலியானா அவதரித்தது கோவாவில்தான். அதான்,மல்கோவா கணக்கில் படு ரகளை அழகில் இருக்கிறார் போலும்.

இலியானா சீக்கிரமே நடிக்க வந்து விட்டதால் படிக்க முடியாமல் போய் விட்டதாம். இருந்தாலும் படிப்பின் மீதுதீராத காதல் கொண்ட இலியானா தபால் மூலம் எம்.ஏ. படித்து வருகிறாராம்.

படிப்பு தவிர டான்ஸிலும் இலியானாவுக்கு நிறைய பாசம் உண்டு. பரதநாட்டியம், கதகளி, ஒடிசி என பலநடனங்கள் தெரியுமாம். வெஸ்டர்ன் டான்ஸிலும் பின்னிப்புடுவாராம், பின்னி. பாலட் டான்ஸிலும் அசகாசசூரியாம் இலி.

எனது அம்மா, அப்பா காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள். எனவே காதல் மீது எனக்கு நிறையமரியாதை உண்டு. என்னையும் கூட காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள். எனக்கும் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளத்தான் ஆசை.

ஸோ, நல்ல ஆள் கிடைத்தால் பிடித்துக் கொள்ளலாம் என காத்திருக்கிறேன் என்று மோனலிசா புன்னகைபூக்கிறார் இலி.

இலி பிடிக்கப் போகும் எலி யாரோ?

Read more about: illiyana ready for love
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil