»   »  இலியானா-சூர்யாவின் சர்வம்! கேடியைத் தொடர்ந்து தெலுங்கு தேவதை இலியானா தமிழில் சூர்யாவுக்குஜோடியாக நடிக்கவுள்ளார்.இப்படத்தை தயாரிக்கப் போவது சர்ச்சை பாலா. இயக்கப் போவது விஷ்ணுவர்த்தன்.மாயாவிக்குப் பிறகு பாலாவின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படம் இது.சர்வம் என்று பெயர் சூட்டியுள்ளனர். நாயகனாக பாலாவின் அன்புத் தம்பி சூர்யாநடிக்கிறார். அவருக்கு ஜோடிதான் இலியானா.பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டுடியோ ஸ்கிரீன் ஆகியவை இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்கின்றன. கோலிவுட்டின் ஹாட்டான இயக்குனராக மாறியுள்ளவிஷ்ணுவர்த்தனை தனது சர்வம் படத்தை இயக்க வேண்டும் என்று பாலாகேட்டபோது உடனடியாக ஓ.கே சொல்லிவிட்டாராம் விஷ்ணு.படத்தின் நாயகியான இலியானா தெலுங்கில் ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளார்.அதுதான் போக்கிரி. அதில், இலியனாவின் இடுப்பு ஒடிக்கும் ஆட்டமும் கிறக்கம்கூட்டம் கவர்ச்சியும் ஏகத்துக்கும் பேர் வாங்கிவிட்டது. இதனால் இலியனா காட்டில்இப்போது மழை.இலியானாவுக்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட் ஏற்பட்டு விட்டது. இலியானா வீட்டுமுன்பு பல தயாரிப்பு பார்ட்டிகள் இளித்துக் கொண்டு நிற்கிறார்கள்.தனக்கு ஏற்பட்ட நேரத்தைப் பார்த்து அயர்ந்து போன இலியானா, போக்கிரியின்தமிழ்ப் பதிப்பில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வந்த வாய்ப்பையே வேண்டாம் என்றுகூறி விட்டார். தெலுங்கில் டப்பு ஜாஸ்தி லேதுனா?அப்படிப்பட்ட இலியானா எப்படி பாலா படத்திற்கு சிக்கினார்? பாலா,விஷ்ணுவர்தன், சூர்யா என பெத்த பார்ட்டிகளாக இருப்பதால் கால்ஷீட்டை அட்ஜஸ்ட்செய்து கொண்டு சர்வம் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்டாராம்.தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்பாலா. சூர்யா தற்போது ஜில்லென்று ஒரு காதல் படத்தை முடித்து விட்டார். அடுத்துசென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தீபிகா படுகோன். பிரபல பேட்மிண்டன் வீரர்பிரகாஷ் படுகோனின் மகள்தான் இந்த அழகு தீபிகா.முன்னதாக தன்னை தூக்கிவிட்டு ஆர்யாவை ஹீரோவாக்கிய பாலாவுக்கு பாடம்புகட்ட, ஆர்யாவுக்கு வாழ்வு தந்த விஷ்ணுவர்த்தனை இயக்குனராக்கி ஒரு படம் எடுக்க திட்டமிட்டார் அஜீத்.படத்தை மோகன் நடராஜன் தயாரிக்க முடிவானது. இதையடுத்து நடராஜன்விஷ்ணுவை அணுக, அவர் மறுத்து விட்டாராம்.நான் பாலாவுக்காக ஒரு படம் செய்ய உறுதி சொல்லி விட்டேன். எனவே என்னால்பண்ண முயாது என்று கழன்று கொண்டு விட்டாராம் விஷ்ணு. இதனால் பாலாவுக்குவிஷ்ணு மூலம் கெளண்டர் கொடுக்கும் அஜீத்தின் பிளான் பிளாப் ஆகிவிட்டது.இப்போது பாலாவுக்காக சர்வம் படத்தை இயக்கப் போகும் விஷ்ணு அப்படத்தின்கதை, திரைக்கதை, வசனத்தையும் அவரே கவனிக்கிறார்.

இலியானா-சூர்யாவின் சர்வம்! கேடியைத் தொடர்ந்து தெலுங்கு தேவதை இலியானா தமிழில் சூர்யாவுக்குஜோடியாக நடிக்கவுள்ளார்.இப்படத்தை தயாரிக்கப் போவது சர்ச்சை பாலா. இயக்கப் போவது விஷ்ணுவர்த்தன்.மாயாவிக்குப் பிறகு பாலாவின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படம் இது.சர்வம் என்று பெயர் சூட்டியுள்ளனர். நாயகனாக பாலாவின் அன்புத் தம்பி சூர்யாநடிக்கிறார். அவருக்கு ஜோடிதான் இலியானா.பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டுடியோ ஸ்கிரீன் ஆகியவை இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்கின்றன. கோலிவுட்டின் ஹாட்டான இயக்குனராக மாறியுள்ளவிஷ்ணுவர்த்தனை தனது சர்வம் படத்தை இயக்க வேண்டும் என்று பாலாகேட்டபோது உடனடியாக ஓ.கே சொல்லிவிட்டாராம் விஷ்ணு.படத்தின் நாயகியான இலியானா தெலுங்கில் ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளார்.அதுதான் போக்கிரி. அதில், இலியனாவின் இடுப்பு ஒடிக்கும் ஆட்டமும் கிறக்கம்கூட்டம் கவர்ச்சியும் ஏகத்துக்கும் பேர் வாங்கிவிட்டது. இதனால் இலியனா காட்டில்இப்போது மழை.இலியானாவுக்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட் ஏற்பட்டு விட்டது. இலியானா வீட்டுமுன்பு பல தயாரிப்பு பார்ட்டிகள் இளித்துக் கொண்டு நிற்கிறார்கள்.தனக்கு ஏற்பட்ட நேரத்தைப் பார்த்து அயர்ந்து போன இலியானா, போக்கிரியின்தமிழ்ப் பதிப்பில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வந்த வாய்ப்பையே வேண்டாம் என்றுகூறி விட்டார். தெலுங்கில் டப்பு ஜாஸ்தி லேதுனா?அப்படிப்பட்ட இலியானா எப்படி பாலா படத்திற்கு சிக்கினார்? பாலா,விஷ்ணுவர்தன், சூர்யா என பெத்த பார்ட்டிகளாக இருப்பதால் கால்ஷீட்டை அட்ஜஸ்ட்செய்து கொண்டு சர்வம் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்டாராம்.தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்பாலா. சூர்யா தற்போது ஜில்லென்று ஒரு காதல் படத்தை முடித்து விட்டார். அடுத்துசென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தீபிகா படுகோன். பிரபல பேட்மிண்டன் வீரர்பிரகாஷ் படுகோனின் மகள்தான் இந்த அழகு தீபிகா.முன்னதாக தன்னை தூக்கிவிட்டு ஆர்யாவை ஹீரோவாக்கிய பாலாவுக்கு பாடம்புகட்ட, ஆர்யாவுக்கு வாழ்வு தந்த விஷ்ணுவர்த்தனை இயக்குனராக்கி ஒரு படம் எடுக்க திட்டமிட்டார் அஜீத்.படத்தை மோகன் நடராஜன் தயாரிக்க முடிவானது. இதையடுத்து நடராஜன்விஷ்ணுவை அணுக, அவர் மறுத்து விட்டாராம்.நான் பாலாவுக்காக ஒரு படம் செய்ய உறுதி சொல்லி விட்டேன். எனவே என்னால்பண்ண முயாது என்று கழன்று கொண்டு விட்டாராம் விஷ்ணு. இதனால் பாலாவுக்குவிஷ்ணு மூலம் கெளண்டர் கொடுக்கும் அஜீத்தின் பிளான் பிளாப் ஆகிவிட்டது.இப்போது பாலாவுக்காக சர்வம் படத்தை இயக்கப் போகும் விஷ்ணு அப்படத்தின்கதை, திரைக்கதை, வசனத்தையும் அவரே கவனிக்கிறார்.

Subscribe to Oneindia Tamil
கேடியைத் தொடர்ந்து தெலுங்கு தேவதை இலியானா தமிழில் சூர்யாவுக்குஜோடியாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை தயாரிக்கப் போவது சர்ச்சை பாலா. இயக்கப் போவது விஷ்ணுவர்த்தன்.

மாயாவிக்குப் பிறகு பாலாவின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படம் இது.சர்வம் என்று பெயர் சூட்டியுள்ளனர். நாயகனாக பாலாவின் அன்புத் தம்பி சூர்யாநடிக்கிறார். அவருக்கு ஜோடிதான் இலியானா.

பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டுடியோ ஸ்கிரீன் ஆகியவை இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்கின்றன. கோலிவுட்டின் ஹாட்டான இயக்குனராக மாறியுள்ளவிஷ்ணுவர்த்தனை தனது சர்வம் படத்தை இயக்க வேண்டும் என்று பாலாகேட்டபோது உடனடியாக ஓ.கே சொல்லிவிட்டாராம் விஷ்ணு.

படத்தின் நாயகியான இலியானா தெலுங்கில் ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளார்.அதுதான் போக்கிரி. அதில், இலியனாவின் இடுப்பு ஒடிக்கும் ஆட்டமும் கிறக்கம்கூட்டம் கவர்ச்சியும் ஏகத்துக்கும் பேர் வாங்கிவிட்டது. இதனால் இலியனா காட்டில்இப்போது மழை.

இலியானாவுக்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட் ஏற்பட்டு விட்டது. இலியானா வீட்டுமுன்பு பல தயாரிப்பு பார்ட்டிகள் இளித்துக் கொண்டு நிற்கிறார்கள்.

தனக்கு ஏற்பட்ட நேரத்தைப் பார்த்து அயர்ந்து போன இலியானா, போக்கிரியின்தமிழ்ப் பதிப்பில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வந்த வாய்ப்பையே வேண்டாம் என்றுகூறி விட்டார். தெலுங்கில் டப்பு ஜாஸ்தி லேதுனா?

அப்படிப்பட்ட இலியானா எப்படி பாலா படத்திற்கு சிக்கினார்? பாலா,விஷ்ணுவர்தன், சூர்யா என பெத்த பார்ட்டிகளாக இருப்பதால் கால்ஷீட்டை அட்ஜஸ்ட்செய்து கொண்டு சர்வம் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்டாராம்.

தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்பாலா. சூர்யா தற்போது ஜில்லென்று ஒரு காதல் படத்தை முடித்து விட்டார். அடுத்துசென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தீபிகா படுகோன். பிரபல பேட்மிண்டன் வீரர்பிரகாஷ் படுகோனின் மகள்தான் இந்த அழகு தீபிகா.

முன்னதாக தன்னை தூக்கிவிட்டு ஆர்யாவை ஹீரோவாக்கிய பாலாவுக்கு பாடம்புகட்ட, ஆர்யாவுக்கு வாழ்வு தந்த விஷ்ணுவர்த்தனை இயக்குனராக்கி ஒரு

படம் எடுக்க திட்டமிட்டார் அஜீத்.

படத்தை மோகன் நடராஜன் தயாரிக்க முடிவானது. இதையடுத்து நடராஜன்விஷ்ணுவை அணுக, அவர் மறுத்து விட்டாராம்.

நான் பாலாவுக்காக ஒரு படம் செய்ய உறுதி சொல்லி விட்டேன். எனவே என்னால்பண்ண முயாது என்று கழன்று கொண்டு விட்டாராம் விஷ்ணு. இதனால் பாலாவுக்குவிஷ்ணு மூலம் கெளண்டர் கொடுக்கும் அஜீத்தின் பிளான் பிளாப் ஆகிவிட்டது.

இப்போது பாலாவுக்காக சர்வம் படத்தை இயக்கப் போகும் விஷ்ணு அப்படத்தின்கதை, திரைக்கதை, வசனத்தையும் அவரே கவனிக்கிறார்.

Read more about: surya and illiyana in sarvam
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil